வைகோ நல்ல போராளி.. நம்ம பக்கத்து ஆளு.. அவருக்கு இப்படியா.. வருத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜி!
சிவகாசி: வைகோவை அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழ்ந்து தள்ளிவிட்டார். "வைகோ ஒரு சிறந்த போராளி, அவருக்கு தண்டனை தந்துள்ளது வருத்தமாக இருக்கிறது" என்று கவலையும் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசும் அமைச்சர்களில் முக்கியமானவர் ராஜேந்திர பாலாஜி. பால் கலப்படம் விவகாரத்தில் இருந்து மோடியை டாடி என சொல்லியது வரை இவரது பேச்சுக்கள் எல்லாமே இணையத்தில் வைரலாகியது.

எனினும் இவர், களங்கம் இல்லாதவர். மனசில் பட்டதை அப்படியே வெளிப்படையாகவே சொல்லிவிடுவார். அந்த மாதிரியேதான் போது வைகோ மீதான தீர்ப்பு குறித்தும் கருத்து கூறி உள்ளார். வைகோ குற்றவாளி என்று கோர்ட் தீர்ப்பு சொன்னபிறகு, அதிமுக தரப்பில் பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லை.
அதேபோல, இந்த வழக்கை தொடுக்க காரணமாக இருந்த திமுகவாலும் அதன் கூட்டணி கட்சியாலும் எதுவுமே பேச முடியாத நிலைமை. இதற்கு காரணம் ஒரே கூட்டணி அல்லது நீதிமன்ற தீர்ப்பை எப்படி விமர்சிப்பது என்பதாக கூட இருக்கலாம். இந்த விஷயத்தில் சீமான் கொந்தளித்த அளவுக்கு வேறு எந்த தலைவரும் கோபப்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில்தான், வைகோ கைது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று சிவகாசியில் செய்தியாளர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டார்கள். அதற்கு அமைச்சர் "வைகோ நமது பகுதியை சேர்ந்தவர். சிறந்த போராளி, தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து பேசி வருபவர். அவரது பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து" என்றார்.
வைகோ பிரதான எதிர்கட்சியின் கூட்டணியில் உள்ளவர் என்று தெரிந்தும், ஒரு அமைச்சர், துணிந்து தனது கருத்தை சொல்லி உள்ளது பாராட்டத்தக்கதே!
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications