சிஎஸ்கே அணியில் இணையும் ஆயுஷ் வர்தக்? சென்னை வந்த 21 வயது மும்பை வீரர்.. தோனியின் திட்டம்!
மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த 21 வயதாகும் ஆயுஷ் வர்தக் சிஎஸ்கே அணியின் டிரையல்ஸ்க்கு அழைக்கப்பட்டுள்ளார். மும்பை சீனியர் அணிக்காக ஆயுச் வர்தக் இதுவரை விளையாடவில்லை என்றாலும், மும்பை யு23 அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். சிகே நாயுடு டிராபியில் முகுல் சவுத்ரிக்கு பின் அதிக ரன்களை விளாசி ஆயுஷ் வர்தக் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பரிதாபமான நிலையில் இருக்கிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 வெற்றி, 5 தோல்வி உடன் 6 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், அடுத்த 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக முக்கிய வீரர்களை காயம் காரணமாக இழந்து வருகிறது. தோனி, கலீல் அஹ்மத், ஆயுஷ் மாத்ரே உள்ளிட்டோர் காயம் காரணமாக விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதில் தோனி மட்டும் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக ஆகாஷ் மத்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ஒரு பேட்ஸ்மேனை சிஎஸ்கே அணி தேடி வருகிறது. அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மிட் சீசன் டிரெயல்ஸ்க்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆயுஷ் வர்தக் அழைக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு சென்னை வந்துள்ள ஆயுஷ் வர்தக் இன்று டிரெயல்ஸில் பங்கேற்கிறார். இவர் இதுவரை மும்பை சீனியர் அணிக்காக தேர்வு செய்யப்பட்டதே இல்லை.
ஆனால் மும்பை யு23 அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். 21 வயதாகும் ஆயுஷ் வர்தக், 2024-25ல் நடந்த சிகே நாயுடு டிராபியில் 3 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களை விளாசியவர். கடந்த ஆண்டு நடந்த தொடரில் 6 இன்னிங்ஸில் விளையாடி 363 ரன்களை சேர்த்துள்ளார். மீடியம் ஃபாஸ்ட் பவுலராகவும் செயல்பட கூடியவர். அண்மையும் எம்சிஏ விருது விழாவில் 2024 சீசனில் யு23 பிரிவில் சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.
ஆயுஷ் வர்தக் டிரெயல்ஸ்க்கு வருவதை சிஎஸ்கே ஜாம்பவான் அஸ்வினும் உறுதி செய்துள்ளார். இதனால் மிட் சீசனில் சிஎஸ்கே அணி சில அதிரடி ஒப்பந்தங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனின் போதும் டிவால்ட் பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல் உள்ளிட்டோரை மிட் சீசனில் தான் சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்தது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications