சூப்பர் ஸ்டார் பாராட்டிய ஹீரோ முகமது ஷமி! 7 விக்கெட்டுகளை விளாசுவார்னு முன்கூட்டியே கணித்த ரசிகர்
மும்பை: உலக கோப்பைக்கான அரையிறுதி போட்டியில் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதை ரசிகர் ஒருவர் முன்கூட்டியே கணித்துள்ளார்.
இந்தியாவில் 13 ஆவது உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகளில் 9 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. 10 ஆவது வெற்றி இலக்கு நேற்றைய தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதின.

உலக கோப்பை தொடரில் 1983, 2003, 2011 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 4ஆவது முறையாக இறுதி போட்டிக்கு இந்தியா நுழைந்துள்ளது. 2003 இல் மட்டுமே இந்தியா தோல்வியடைந்தது.
நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா இறுதி போட்டியில் பங்கேற்கிறது. இந்திய அணியில் உள்ள ஆட்டக்காரர்கள் அனைவரும் ஃபுல் ஃபார்மில் உள்ளதால் இந்த முறையும் நாம்தான் கப்பை பெறுவோம் என நம்பிக்கை ரசிகர்களுக்கு உள்ளது.
நேற்றைய தினம் தென்னாப்பிரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உலக கோப்பைக்கான இறுதி போட்டி நடக்கிறது.
இந்த நிலையில் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியின் பேட்டிங்கின் போது சீட்டுக் கட்டுகள் போல் சரிந்தது. இதற்கு காரணம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் ஒருவரே 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் ஷமியை பாராட்டி பலரும் ட்வீட்டுகளை போட்டு வருகிறார்கள்.

மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியை காண சென்ற ரஜினிகாந்தும் ஷமியை பாராட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: முதலில் கொஞ்சம் டென்சனாகவே இருந்தது. நியூஸிலாந்து அணியினர் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த பிறகு தான் கொஞ்சம் டென்ஷன் குறைந்தது. 100 சதவீதம் கப் நமக்கும் தான்.
இந்த அரையிறுதி போட்டியில் இந்தியா வென்றதற்கு 100 சதவீதம் ஷமிதான் காரணம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஷமி அரையிறுதியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என ரசிகர் ஒருவர் முன்கூட்டியே போட்டிருந்த பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர் அரையிறுதியில் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது போல் கனவு கண்டேன் என பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications