அடித்து மேலே வரும் ஆஸ்திரேலியா.. செமி பைனல் வாய்ப்பை இழக்கும் பெரிய அணி.. உலகக் கோப்பையில் ட்விஸ்ட்
சென்னை: 2023 உலகக் கோப்பை தொடரில் செமி பைனல் செல்லும் அணிகள் லிஸ்டில் பெரிய ட்விஸ்ட் நடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் தொடக்கத்தில் பூனையாக இருந்த சில அணிகள் தற்போது புலியாக மாறி உள்ளன. ஆட்டோ கார மாணிக்கமாக இருந்த சில அணிகள் தற்போது மாணிக் பாட்ஷாவாக மாறிவிட்டன.

இதனால் மேட்னி ஷோ போல சோம்பலாக சென்று கொண்டு இருந்த உலகக் கோப்பை இப்போது விறுவிறுப்படைந்து உள்ளது. அதோடு புள்ளிகள் பட்டியலில் நெதர்லாந்திற்கு மேலே 9வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா தற்போது அடித்து மேலே வந்துள்ளது.
ஆஸ்திரேலியா கம்பேக்; முதல் 4 இடங்களுக்குள் ஆஸ்திரேலியா தற்போது வந்துள்ளது. நேற்று கூட நெதர்லாந்துக்கு எதிராக 301 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. 399/8 ரன்களை முதலில் ஆடிய ஆஸ்திரேலியா எடுத்தது. அதன்பின் இறங்கிய நெதர்லாந்து அணி 90 ரன்கள் எடுத்து தோல்வி அடைய ஆஸ்திரேலியா எளிதாக வென்றது.
நேற்று நடந்த மேட்சில் மட்டுமின்றி.. முதல் 2 மேட்சில் தோல்வி அடைந்த பின் ஆஸ்திரேலியா வேகமாக அடித்து ஆடி மேலே வந்து கொண்டு இருக்கிறது. பல ஆஸ்திரேலியா அணியாக மீண்டும் அந்த அணி மேலே வந்து கொண்டு உள்ளது. இதுவரை 5 போட்டிகளில் ஆடிய அந்த அணி 3 போட்டிகளில் வென்று 4ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இந்தியா வெற்றி: கடந்த சில போட்டிகளாக ஆட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.
அதன்பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இதன் மூலம் 5 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.
நியூசிலாந்து அணி: இன்னொரு பக்கம் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது. இந்த போட்டியை தவிர வரிசையாக மற்ற போட்டிகளில் வென்றுள்ளது. இதனால் நியூசிலாந்து, இந்தியா இரண்டும் கிட்டத்தட்ட செமி பைனல் செல்வது உறுதியாகி உள்ளது.

இன்னொரு பக்கம் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் 3ல் வென்றுள்ளது. அதேபோல் மிக அதிகமாக +2.212 ரன் ரேட் வைத்துள்ளது. 2 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கீழே இருந்த ஆஸ்திரேலியா அணி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பி உள்ளது. மீண்டும் அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்துள்ளது. இந்த ஆஸ்திரேலியா அணியின் வருகையால் 3 பெரிய அணியில் ஒரு அணி செமி பைனல் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தற்போது 4 போட்டிகளில் ஆடி இங்கிலாந்து, இலங்கை தலா 1 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. பாகிஸ்தான் 5 போட்டிகளில் 2ல் மட்டுமே வென்றுள்ளது. இதனால் இந்த 3 அணிகளில் ஒன்று செமி பைனல் செல்லும் வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications