புள்ளிப்பட்டியலில் 7வது இடம் வந்த மும்பை.. சிஎஸ்கே அணியை முந்திய பல்தான்ஸ்.. இனிதான் ஆட்டமே இருக்கு!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்த மும்பை அணி, ஒரே வெற்றியால் 7வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனால் 7வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய திலக் வர்மா 45 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 101 ரன்களை குவித்தார்.

Mumbai Indians

இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 15.5 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக மும்பை அணி அபரிதமான வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை அணி, ஒரு வழியாக வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறது. இதன் மூலமாக 10வது இடத்தில் இருந்த மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இதனால் சிஎஸ்கே அணி 7வது இடத்தில் இருந்து 4 புள்ளிகளுடன் 8வது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளது. லக்னோ அணி 9வது இடத்திலும், கேகேஆர் அணி கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மும்பை அணி வெற்றி பாதைக்கு திரும்பி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் ஏப்ரல் 23ஆம் தேதி மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு அணிகளும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூழலில், எல் கிளாசிக்கோ ஆட்டத்தில் மோதுகின்றன. அதேபோல் புள்ளிப் பட்டியலிலும் அடுத்தடுத்த இடங்களில் இரு அணிகளும் இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+