இந்திய அணியால் பூரித்துப்போன சோனியா! பைனலில் வெல்ல வீடியோவில் வாழ்த்து! என்ன சொன்னார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனல் இன்று நடைபெற உள்ள நிலையில் சோனியா காந்தி வீடியோ மூலம் இந்திய அணியை வாழ்த்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 50 ஓவர் உலககோப்பை போட்டி நடந்து வந்தது. லீக் போட்டியை தொடர்ந்து அரையிறுதி போட்டி நடந்தது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவும், 2வது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதி போட்டிக்குள் நுழைந்தன.

 Ahead of World Cup 2023 Final: Sonia Gandhi Congratulates to team India

இதையடுத்து இன்று நடக்கும் உலககோப்பை இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வென்ற நிலையில் இறுதி போட்டியிலும் வாகை சூடி உலககோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். மேலும் கடந்த 2011ம் ஆண்டில் அப்போதைய கேப்டன் டோனி தலைமையில் உலககோப்பையை வென்றது. அதன்பிறகு நடந்த 2 போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லாத நிலையில் சொந்த மண்ணில் மீண்டும் இந்தியா 12 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

மறுபுறம் ஆஸ்திரேலியாக கடந்த 2015ம் ஆண்டில் உலககோப்பையை வென்றது. கடந்த 2019ல் ஆஸ்திரேலியா வெற்றிப்பெறாத நிலையில் இந்த முறை கோப்பையை வெல்ல இன்றயை போட்டியில் போராடும். இதனால் இன்றைய பைனல் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள், வெளிநாட்டு தலைவர்கள் நேரில் பார்க்க உள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவியான சோனியா காந்தி இந்திய அணிக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சோனியா காந்தி 1.27 நிமிடம் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: உலககோப்பை போட்டியில் சிறப்பாகவும், டீம் வொர்க்காகவும் நன்றாக செயல்பட்டு வரும் உங்களுக்கு முதலில் வாழ்த்து சொல்கறேன். நீங்கள் தொடர்ச்சியாக நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறீர்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இறுதி போட்டிக்கு முன்னேறிய விதம் என்பது ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது.

மேலும் கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு நல்ல படிப்பினை வழங்கும் வகையிலும் உள்ளது. அந்த படிப்பினை என்பது ஒற்றுமை, கடின உழைப்பு மற்றும் உறுதியான நிலைப்பாடு மற்றும் உங்கள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளிட்டவற்றை காட்டுகிறது. மேலும் தனிப்பட்ட சாதனை மற்றும் சிறப்புமிக்க வெற்றிகளை குறிப்பிட விரும்புகிறேன். அதாவது 1983, 2011ம் ஆண்டுகளில் இந்திய அணி உலககோப்பையை வென்றதை குறிப்பிடுகிறேன்.

இந்த 2 சந்தர்ப்பங்களிலும் நாடு மகிழ்ச்சியையும், கவுரவத்தையும் உணர்ந்தது. பலாினம், பிராந்தியம், மொழி, மதம், வர்க்கம் ஆகியவற்றை தாண்டி கிரிக்கெட் எப்போதும் நம் நாட்டை ஒன்றிணைத்துள்ளது. இந்த ஆண்டு இறுதி போட்டிக்கு நீங்கள் தயாராகும் வேளையில் மொத்த நாடும் உங்களுடன் இருக்கிறது. போட்டியில் வெல்ல வாழ்த்து சொல்கிறேன். உலக சாம்பியன் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+