கங்குலியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி
Recommended Video

டெல்லி: கோல்கத்தாவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் ஒரு சாதனையை, விராட் கோஹ்லி முறியடித்தார்.
மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டிகள், மூன்று டி–20 போட்டிகளில் விளையாட, இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. தற்போது டெஸ்ட் போட்டித் தொடர் நடந்து வருகிறது.

கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றி என்ற பெருமை, கேப்டன் கூல், மகேந்திர சிங் டோணிக்கு உள்ளது. அவர், 60 போட்டிகளில், 27 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
சவுரவ் கங்குலி கேப்டனாக 49 போட்டிகளில், 21 வெற்றிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரை 3–0 என்ற கணக்கில் வென்றால், கங்குலியின் சாதனையை கோஹ்லி முறியடிக்க முடியும். கோஹ்லி கேப்டனாக இதுவரை 29 போட்டிகளில், 19ல் வென்றுள்ளார்.
கோல்கத்தா போட்டி டிராவில் முடிந்ததால், அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால், கங்குலியின் சாதனையை கோஹ்லி சமன் செய்ய முடியும்.
இந்த நிலையில், கேப்டனாக சவுரவ் கங்குலி செய்த ஒரு சாதனையை, கோல்கத்தா போட்டியில் கோஹ்லி முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்தியக் கேப்டன்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்கு தள்ளி, நான்காவது இடத்துக்கு கோஹ்லி முன்னேறினார்.
கங்குலி கேப்டனாக 49 டெஸ்ட்களில் 2,561 ரன்கள் குவித்திருந்தார். கோஹ்லி, 30 டெஸ்ட்களில், 2,664 ரன்கள் சேர்த்து, பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறினார்.
இதில் டோணி, 3,454 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் 3,449 ரன்களும், முகமது அசாருதீன், 2,856 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications