கலங்காதீங்க! உலக கோப்பை தோல்வியால் உடைந்துபோன விராட் கோலி.. தட்டி கொடுத்து அனுஷ்கா சர்மா ஆறுதல்
அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததும் மிகவும் உடைந்து போன விராட் கோலியை அவரது மனைவி அனுஷ்கா சர்மா, ஆறுதல் படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் மல்லு கட்டியதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை உன்னிப்பாக கவனித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அபாய கட்டத்தில் இருந்தது.
கண்கலங்கிய வீரர்கள்: ஆனால், ட்ராவிஸ் ஹெட், லபுசேன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து நங்கூரம் போல் நிலைத்து நின்று அணியை வெற்றிக் கோட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்த கூட்டணியை முறித்து, ஆஸி அணிக்கு முட்டுக்கட்டை போட இந்திய அணி எடுத்த எந்த வியூகமும் கைகொடுக்கவில்லை. சொல்லப்போனால் ட்ராவிஸ் ஹெட் தனி ஒருவராக இந்தியாவின் உலக கோப்பை கனவை தவிடு பொடியாக்கினார்.
43 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6வது முறையாக சாம்பியன் ஆனது. இந்த உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் தொடர்ந்து வென்ற இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் அதிர்ச்சி அளித்து கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. இந்தியா தோற்றதும் இந்திய வீரர் முகமது சிராஜ் உள்ளிட்டோர் மைதானத்திலேயே கண்கலங்கினர். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைவரும் இருண்ட முகத்துடன் வெளியேறினர்.
அனுஷ்கா சர்மா ஆறுதல்: குறிப்பாக விராட் கோலி மிகவும் உடைந்து காணப்பட்டார். கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை இந்த உலக கோப்பை தொடரில் விராட் கோலி படைத்து இருந்தார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 50 சதங்கள் அடித்து யாராலும் தொட முடியாது என்று சொல்லப்பட்ட சச்சினின் சாதனையை சர்வ சாதரணமாக முறியடித்தார். இதனால், உலக கோப்பையை இந்த முறை எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற கனவுடன் இருந்த விராட் கோலிக்கு தோல்வி பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அவுட் ஆன போது அவருக்கு கோலி கைகொடுத்து தட்டிக் கொடுத்தார். ஆனாலும் விராட் கோலி முகம் இறுக்கமாகவே இருந்தது. தோல்வியால் துவண்டு இருந்த கோலியை வீரர்கள் ஓய்வறைக்கு சென்றதும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ஆறுதல் கூறினார். விராட் கோலியின் தோளில் தட்டியபடி அனுஷ்கா சர்மா ஆறுதல் கூறும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications