ஆயுஷ் மாத்ரேவுக்கு 3 வாரங்கள் ரெஸ்ட்.. சிஎஸ்கே அணிக்கு பிரம்மாண்ட சிக்கல்.. தயாராகும் உர்வில் படேல்?
மும்பை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, காயம் காரணமாக மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்று மும்பை வந்த சிஎஸ்கே அணியுடன் ஆயுஷ் மாத்ரே நடந்து வந்த போதும் கூட, சிறிது வலியுடன் நடந்து வந்தார்.
அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவின் இடது காலில் தசைப்பிடிப்பு (Hamstring tear) காயம் ஏற்பட்டது. வேகமாக ஓடி ரன் எடுக்க முயற்சித்த போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது. சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டரில் அதிரடியான ஆட்டத்தை விளையாடி சிறந்த ஃபார்மில் இருந்தார் ஆயுஷ் மாத்ரே.

6 போட்டிகளில் விளையாடியுள்ள ஆயுஷ் மாத்ரே, 201 ரன்களை குவித்திருக்கிறார். இப்படியான சூழலில் ஆயுஷ் மாத்ரேவின் காயம் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கிறது. சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் மும்பை அணியை எதிர்த்து வான்கடே மைதானத்தில் விளையாட உள்ளது. மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே சொந்த ஊரில் விளையாட முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.
ஆயுஷ் மத்ரேவின் காயம் எந்த அளவு தீவிரமானது என்பதை உறுதிப்படுத்த, இன்று மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெறவுள்ள போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் என்றாலும், முழுமையான மருத்துவ அறிக்கை வந்த பிறகே அவர் எத்தனை போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.
தற்போது வரை ஆயுஷ் மாத்ரே 3 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே டிவால்ட் பிரெவிஸ் காயம் காரணமாக 3 போட்டிகளை மிஸ் செய்தார். அதேபோல் தோனி இன்னும் காயத்தில் இருந்து குணமடையவில்லை. கலீல் அஹ்மத் காயத்தால் மொத்தமாக வெளியேறி இருக்கிறார். நேதன் எல்லீஸ் காயத்தால் விலகிவிட்டார்.
இதனால் சிஎஸ்கே அணி மாற்று வீரர்களை அடையாளம் காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் மாத்ரேவின் இடத்தில் அதிரடி வீரர் உர்வில் படேல் விளையாட வைக்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த சீசனில் உர்வில் படேல் நம்பர் 3 பேட்ஸ்மேனாகவே ஆடி இருந்தார். அல்லது இளம் வீரர் கார்த்திக் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications