உங்க ஆசிய கோப்பையே வேண்டாம்.. இந்திய அணி அந்த முடிவை எடுத்தது எப்படி? கடைசி நொடியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

நேற்று துபாயில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் 69 ரன்களை எடுத்த திலக் வர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், போட்டிக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்துவிட்டது.

Asia Cup 2025 cricket

இந்தியா எப்படி முடிவு எடுத்தது?

இந்த முடிவிற்கு இந்திய அணி எப்படி வந்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதம் தரப்பு இது தொடர்பாக ஊடகங்களில் வெளியிட்ட தகவலில், பாகிஸ்தான் அமைச்சர் கையால் எப்படி விருது வாங்க முடியும். அவர் கையால் எப்படி கோப்பை வாங்க முடியும். பல விருந்தினர்கள் இருந்தனர். அவர்கள் கோப்பையை கொடுத்திருக்கலாம்.

நாங்கள் எப்படி இந்தியாவை தொடர்ந்து அவமதித்து பேசிய ஒருத்தரிடம் இருந்து கோப்பையை வாங்க முடியும். பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் கிரிக்கெட் தாண்டி அரசியல் ரீதியாக எங்களை சீண்டினார்கள். இரண்டு அணிகளுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும்.

பாகிஸ்தான் வீரர்களை நாங்கள் எந்த சைகையையும் செய்யவில்லை, கை அசைவுகளையும் காட்டவில்லை. கண்ணியத்துடன் விளையாட விரும்பினோம். அவர்கள் களத்திற்கு வெளியே ஒரு கருத்தை உருவாக்க விரும்பினர். முடிவு எந்த அணிக்கும் சாதகமாக அமையலாம்.

ஆனால் போட்டி முடிந்த பிறகு, நீங்கள் கொடுத்த முயற்சி மற்றும் விளையாடிய ஆட்டத்தைப் பற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து ஆடினோம். வெளியிலிருந்து பார்த்தால் நிறைய நடப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் வீரர்களிடம், உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு நல்ல ஆட்டத்தை விளையாடுவோம். இறுதியில் எது வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று கூறினோம்,

எதையும் நினைக்காமல் ஆடினோம். இந்திய அணியை பாகிஸ்தான் வீரர்கள் கிண்டல் செய்ததை கண்டிக்காத நக்வியிடம் இருந்து எப்படி கோப்பை வாங்க முடியும் என்று நினைத்தோம், அதனால் அந்த முடிவை எடுத்தோம். சூர்ய குமார் தரப்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று நடந்தது என்ன? மொஹ்சின் நக்வி ஓடினார்

நேற்று வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்ததால் பரிசளிப்பு விழாவில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. இதனால், இந்திய அணி கோப்பை இல்லாமலேயே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.

இந்தியா அணி வெறும் இரண்டு வாரங்களில் பாகிஸ்தானை மூன்றாவது முறையாக தோற்கடித்து ஆசியக் கோப்பையை வென்றது. ஆனால், சூர்யகுமார் யாதவும் இந்திய அணியும் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்தனர். இதனால், நக்வி கோப்பையை எடுத்துக்கொண்டு மேடையிலிருந்து வெளியேறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+