நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்- அதியா ஜோடிக்கு பிறந்த பெண் குழந்தை.. குவியும் வாழ்த்து
பெங்களூர்: இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்துள்ளதை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து கே எல் ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல். ஓபனிங், மிடில் ஆர்டர் என எங்கு வேண்டுமானாலும் களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர் ராகுல். ஐபிஎல் தொடரிலும் இவரை டெல்லி அணி பெருந்தொகைக்கு வாங்கியிருந்தது. இருப்பினும், தனிப்பட்ட காரணங்களால் இவர் முதல் இரு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ராகுலுக்கு பெண் குழந்தை
அவரது மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருந்த நிலையில், குழந்தை பிறப்பு காரணமாகவே ராகுல் முதல் இரு போட்டிகளில் பங்கேற்கவில்லை என சொல்லப்பட்டது. இதற்கிடையே கே எல் ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்துள்ளதை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து கே எல் ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். "Blessed with a baby girl" என்ற வாசகத்துடன் ஒரு போட்டோவை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
அந்த போட்டோவில் "24-03-2025" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ராகுல் அதியா தம்பதிக்கு நேற்று குழந்தை திங்கட்கிழமை பிறந்துள்ளது. இருவரும் போட்டோவை மட்டுமே பகிர்ந்துள்ளனர். கூடுதலாக எந்தவொரு தகவலையும் பகிரவில்லை. அதேநேரம் குழந்தையின் எமோஜியை மட்டுமே பகிர்ந்துள்ளனர். இதையடுத்து அவர்களின் ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
குவியும் வாழ்த்துகள்
"உங்கள் அன்பான குட்டி தேவதைக்கு வாழ்த்துகள்" என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். குட்டி தேவதை ராகுலின் ஆட்டத்தையும் நிச்சயம் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல பிரபலங்கள் நண்பர்கள் எனப் பலரும் ராகுல்- அதியா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதியா ஷெட்டி தான் கர்ப்பமாக இருப்பதாகக் கடந்தாண்டு நவம்பரில் அறிவித்தார். அந்த போஸ்டில், "எங்கள் அழகான தேவதை விரைவில் வருகிறது. 2025" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் தான் அந்த ஜோடிக்கு இப்போது குழந்தை பிறந்துள்ளது.
அதியா- ராகுல் தம்பதி
அதியா வேறு யாரும் இல்லை.. பிரபல நடிகரான சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். கடந்த 2019 ஜனவரி மாதம் கே.எல். ராகுல் தனது நண்பர் மூலம் அதியாவை சந்தித்துள்ளார். பார்த்தவுடன் இருவருக்கும் ஒரு கனெக்ஷன் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல ஆண்டுகள் டேட் செய்த நிலையில், 2023ம் ஆண்டு ராகுல்- அதியா ஜோடியின் திருமணம் நடந்தது. கண்டாலாவில் உள்ள சுனியேலின் பண்ணை வீட்டில் நடந்த திருமணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
விரைவில் அணிக்குத் திரும்புகிறார்
கடந்த மெகா ஏலத்தில் ராகுலை டெல்லி அணி வாங்கியிருந்தது. குழந்தை பிறப்பு காரணமாக அவர் முதல் இரு போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இருப்பினும், விரைவில் அவர் அணியில் இணைவார் என்றும் அதன் பிறகு தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்கேற்பார் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications