பாபர் அசாம் நிலைமையை பாருங்க.. ஆஸி. பிக் பாஷ் லீக் விளையாட போய்.. சொதப்பி.. ரசிகர்கள் கத்தி கூச்சல்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் (BBL 2025-26) தொடரில் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடும் பாபர், முதல் போட்டியில் 5 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது போட்டியிலும் சொற்ப ரன்களே எடுத்து வெளியேறினார். மைதானத்திலிருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு கேலி செய்தனர்.
அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸுக்கு எதிரான போட்டியில் (சிட்னி கிரிக்கெட் மைதானம்), பாபர் அசாம் ஓப்பனிங்கில் இறங்கி 10 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்து வீரர் லூக் வுட் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால், இரு போட்டிகளில் பாபரின் மொத்த ரன்கள் 11 மட்டுமே (2 + 9).

போட்டிக்குப் பிறகு, சிட்னி ரசிகர்கள் பாபரை பார்த்து கூச்சல் போட்டு (booed) கிண்டல் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
இது பாபருக்கு அவமானகரமான தருணமாக பார்க்கப்படுகிறது. பிக் பாஷ் அதிகாரப்பூர்வ கணக்கும் அவரது விக்கெட்டை "பெரிய விக்கெட்" என கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேலி செய்வதாகவே பார்க்கப்படுகிறது.
பாபர் ஆசாமின் தோல்வி சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் ரசிகர்கள் உட்பட பலர், "கிங்" என அடைமொழியிட்டு கோலிக்கு ஈடானவர் என்று போற்றி புகழும் பாபர் ஆசாம் ஆஸ்திரேலிய மண்ணில் தவழ்வதாக கமெண்ட்ஸ் பதிவிடுகின்றனர் ரசிகர்கள்.
அதேநேரம், பாகிஸ்தான் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து, "ஃபார்ம் திரும்பும்" என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பாபரின் அடுத்த போட்டி டிசம்பர் 20ஆம் தேதி சிட்னி தண்டருக்கு எதிராக நடைபெறுகிறது. உலகக் கோப்பைக்கு முன் ஃபார்மை மீட்டெடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications