ஆஸ்திரேலியாவை உலுக்கிய "வயிற்று வலி".. சரியாக மேட்சுக்கு முன் போன கெட்ட செய்தி! இதை எதிர்பார்க்கலையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணிக்கு முக்கியமான கெட்ட செய்தி ஒன்று சென்றுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று நடக்க உள்ளது. ஒருநாள் தொடரில் 2011க்கு பின்பாக மீண்டும் இறுதிப்போட்டிக்கு இந்தியா வந்துள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உச்சத்தை எட்டி உள்ளது. வரிசையாக எல்லா போட்டிகளும் வென்றுவிட்டு இந்திய அணி கடைசி போட்டியிலும் வென்றுவிட்டால் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றுவிடும்.

 Bad news for Australia ahead of the 2023 World Cup Finals against Team India

இந்த முறை இந்திய அணி முழு பார்மில் இருக்கிறது. மற்ற அணிகளை விட வலுவாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவை விட வலுவான பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டர் இந்திய அணிக்கு உள்ளது. இதனால் இந்திய அணிக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்தியாவின் ஆதிக்கம்: இந்த சீசன் முழுக்கவே இந்தியா தீவிரமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எந்த அணியும் இந்தியா மீது பிரஷர் போடவே முடியவில்லை. அணியின் பேட்டிங் பலம் உச்சத்தில் உள்ளது. இப்போதும் கூட சூர்ய குமார் யாதவ், ஜடேஜா ஆகியோரை இறக்கி இந்தியா சோதனை செய்ய முடியவில்லை. காரணம் இவர்கள் இறங்க வேண்டிய அவசியமே இல்லை.

ஏனென்றால் மிடில் ஆர்டர் வலுவாக உள்ளது. முக்கியமாக ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் வலிமையாக உள்ளனர் . அவர்களின் பேட்டிங் நல்ல பார்மில் உள்ளது. இதனால் மொத்தமாக இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் வலிமை அடைந்து உள்ளது. இன்னொரு பக்கம் இந்திய அணியின் பவுலிங்கும் புதிய உச்சம் அடைந்துள்ளது.

ஷமி வருகைக்கு பின் இந்திய அணியின் பவுலிங் மிக சிறப்பாக உள்ளது. அவர் உறுதியாக ஒரு போட்டிக்கு 5- 6 விக்கெட்டுகளை எடுக்கிறார். எளிதாக விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை திசை திருப்புகிறார். அதனால் இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடக்கும் மேட்ச் அதிக சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு சிக்கல்: 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணிக்கு முக்கியமான கெட்ட செய்தி ஒன்று சென்றுள்ளது. அதன்படி பொதுவாக ஆஸ்திரேலியா என்று இல்லாமல் எந்த அணி வெளிநாட்டிற்கு சென்றாலும் அந்த உள்நாட்டு அணியின் பவுலர்களை வைத்து பயிற்சி எடுக்கும்.

உதாரணமாக டெஸ்ட் போட்டிகளுக்கு முன் அஸ்வின் போலவே பவுலிங் போடும் நபர்களை வைத்து அணிகள் அஸ்வினை எதிர்கொள்ள பயிற்சிகள் எடுக்கும். அதேபோல்தான் இந்த உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலியா அணி முதல் போட்டிக்கு முன் அஸ்வினை போலவே பவுலிங் போடும் நபரை வைத்து பயிற்சி எடுக்க முயன்றது. ஆனால் அவர் பயிற்சிக்கு வர மாட்டேன் என்று விலகிவிட்டார்.

அதேபோல் குல்தீப் போலவே சைனா மேன் பவுலிங் போடும் அகமதாபாத் உள்ளூர் வீரர் ஒருவரை ஆஸ்திரேலியா பயிற்சிக்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் அவரும் பயிற்சிக்கு நேற்று வரவில்லை. வயிற்றுவலி என்று கூறி அவர் வரவில்லையாம். திடீரென இவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது/. இதனால் ஆஸ்திரேலியா அணி கடுமையாக திணற தொடங்கி உள்ளதாம். குல்தீப் போல இடதுகை லெக் ஸ்பின் போடும் பவுலர் இல்லாமல் பயிற்சியில் அந்த அணி திணறிக்கொண்டு இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+