அதிர்ச்சி! வங்கதேச வீரருக்கு திடீர் நெஞ்சு வலி.. கிரிக்கெட் மைதானத்திலேயே விழுந்த தமீம் இக்பால்
டாக்கா: வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சு வலியால் சுருண்டு விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தமீம் இக்பால். வங்கதேச அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகள், 243 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். வங்கதேச கிரிக்கெட் வளர்ச்சியில் ஷகிப் அல் ஹசனுக்கு பின் அதிக பங்காற்றியவர் தமீம் இக்பால் தான். கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் தமீம் இக்பால் ஓய்வை அறிவித்தார்.

இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தமீம் இக்பால் விளையாடி வருகிறார். இந்த நிலையில் டாக்கா அருகே நடைபெற்ற கிளப் போட்டியில் தமீம் இக்பால் ஆடிய போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனை அழைத்து செல்ல ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக அருகில் இருந்த மருத்துவமனையில் தமீம் இக்பால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை பரிசோதித்த மருத்துவர்கள் தமீம் இக்பாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை உறுதி செய்துள்ளனர். இதனை அவரை டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக ஹெலிபேட் தயார் செய்யப்பட்டு, ஹெலிகாப்டர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதில் பயணிக்க தமீம் இக்பால் பயணித்த போது, மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பியுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இதுகொஞ்சம் கடினமான நேரம்தான். அவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவர் முழு உடல்நலத்துடன் வீடு திரும்புவதற்கு மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டு முதல் பாதி ஆட்டம் நடந்த போது தமீம் இக்பாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதனால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இவ்வளவு ஃபிட்னஸ் உடன் இருந்தும், நெஞ்சு வலி ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications