பும்ராவை விரட்டி விரட்டி அடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. 5வது போட்டியாக விக்கெட் இல்லையா.. பாவம் பல்தான்ஸ்!
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தொடர்ந்து 5வது போட்டியாக விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறி இருக்கிறார். மொத்தமாக இந்த சீசனில் 114 பந்துகளை வீசியுள்ள பும்ரா, 164 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. இதுவும் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய டி காக் 60 பந்துகளில் 112 ரன்களை சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்ர்து 198 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 80 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 66 ரன்களையும் விளாசினார். இந்த சீசனில் மும்பை அணி அடையும் 4வது தோல்வி இதுவாகும். இதனால் புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 9வது இடத்தில் நீடிக்கிறது.
இந்தப் போட்டியிலும் பும்ராவுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. தொடர்ந்து 5வது போட்டியாக பும்ரா விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறி வருகிறார். இந்த சீசனில் மொத்தமாக 114 பந்துகளை வீசியுள்ள பும்ரா, 164 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். எகனாமி ரேட் சிறப்பாக இருந்தாலும், பும்ராவுக்கு விக்கெட் கிடைக்காதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
அதேபோல் இந்தப் போட்டியில் பும்ராவின் பவுலிங்கை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விரட்டி விரட்டி அடித்தார் என்றே சொல்லலாம். ஏனென்றால் பும்ரா வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 16 ரன்களையும், 15வது ஓவரில் 2 பவுண்டரிகள் உட்பட 11 ரன்களையும் விளாசி தள்ளினார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போதே பிளே ஆஃப் சுற்றில் பும்ராவின் யார்க்கர் பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி ஒரு பவுண்டரியை விளாசினார். அந்த பவுண்டரியை இதுவரை ரசிகர்களால் மறக்க முடியவில்லை. இந்தப் போட்டியிலும் பும்ராவின் பவுன்சரில் ஸ்ரேயாஸ் ஐயர் சிக்ஸ் அடித்திருப்பது பலரையும் மிரள வைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications