4 வேகப்பந்துவீச்சாளர்கள் உறுதி.. ஆகாஷ், அன்சுல் கம்போஜ்க்கு வாய்ப்பு? சூசகமாக சொன்ன சுப்மன் கில்!

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்பதை கேப்டன் சுப்மன் கில் உறுதி செய்துள்ளார். 4 வேகப்பந்துவீச்சாளர்கள் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறிய சுப்மன் கில், பழைய பந்தில் ஹார்ட் லெந்தில் வீசக் கூடிய பவுலரை அடையாளம் காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை பற்றி சிந்திக்கவே முடியும். ஏனென்றால் இந்திய அணி விளையாட உள்ள 7 போட்டிகளில் 6ல் வெல்ல வேண்டிய தேவை உள்ளது.

Shubman Gill

இதன் காரணமாகவே ஒருநாள் தொடரில் இருந்து பாதியுடன் விலகி சுப்மன் கில், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் டெஸ்ட் தொடருக்கு தயாராக தொடங்கினர். வேகப்பந்துவீச்சாளர்களான சிராஜ், பும்ரா உள்ளிட்டோர் சோர்வடைந்துவிடக் கூடாது என்பதால், அவர்கள் பெரிதாக பவுலிங் செய்யவும் கூட அனுமதிக்கப்படவில்லை.

டெஸ்ட் தொடருக்காக வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய அணி பாதுகாத்து வருகிறது. அதிலும் குல்தீப் யாதவை நீக்கிவிட்டு ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட குர்னூர் ப்ராரை டெஸ்ட் அணியில் கம்பீர் சேர்த்துள்ளார். அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஒருநாள் தொடரில் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதனால் டெஸ்ட் தொடரில் யாரை சேர்க்கலாம் என்பது தலைவலியாக மாறியுள்ளது. ஆனால் இதனை ரசிக்கிறேன். இந்திய அணியின் காம்பினேஷனை இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க முடிவு செய்துள்ளோம்.

ஒருநாள் தொடரை விடவும் டெஸ்ட் தொடர் கூடுதல் சவாலானது,. நியூசிலாந்து அணி சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளது. நிச்சயமாக 7 பேட்ஸ்மேன்களுடன் விளையாடுவோம். 8 மற்றும் 9 ஆகிய இடங்களில் ஓரளவுக்கு பேட்டிங் ஆடக் கூடிய ஆகாஷ் தீப், அன்சுல் கம்போஜ் இருக்கின்றனர். நிதிஷ் குமார் ரெட்டியாலும் பேட்டிங் செய்ய முடியும்.

ஆனால் பந்து பழையதாக மாறிய பின், ஹார்ட் லெந்தில் வீசக் கூடிய பவுலர் அவசியம். அதற்கேற்ப பிளேயிங் லெவனை முடிவு செய்வோம். அதேபோல் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இணைந்துள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன். உலகம் முழுவதும் அவர் சதங்களை விளாசி இருக்கிறார். அதனை நியூசிலாந்து மண்ணிலும் செய்வார் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+