IND vs NZ: ரோஹித் சர்மாவுக்கு மட்டுமல்ல.. அந்த வீரருக்கும் கடைசி போட்டி இதுதான்? சோகமான ரசிகர்கள்!
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான கேன் வில்லியம்சனுக்கும் இதுவே கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று துபாயில் நடக்கவுள்ளது. 2000ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. அந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதனால் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் இருநாட்டு ரசிகர்களும் சோகத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் இந்த ஆட்டம் 2 முக்கிய வீரர்களுக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் வீரர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான். ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றியுடன், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ரெட் பால் கிரிக்கெட்டில் விளையாட ரோஹித் சர்மாவின் ஃபிட்னஸ் அனுமதிக்காத நிலையில், ஃபார்மிலும் இல்லாமல் திணறி வருகிறார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போதே பும்ராவுக்கு கேப்டன்சியை விட்டுக் கொடுத்தார்.
இதனால் இனி ரோஹித் சர்மா ரெட் பால் கிரிக்கெட் பக்கம் வருவது சந்தேகம்தான். இந்த நிலையில் 38 வயதாகும் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பதால், வென்றாலும் தோல்வியடைந்தாலும் இதன்பின் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான கேன் வில்லியம்சனுக்கு இதுவே கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தை நிராகரித்த கேன் வில்லியம்சன், ரெட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பைக்கு பின் கேப்டன்சியில் இருந்து விலகி கொண்டார்.
இதனால் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இதுவே அவரின் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்தப் போட்டியின் இறுதியில் அதிர்ச்சி காத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களது ரசிகர்களும் ஃபேர்வெல் கொடுக்க தயாராகி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications