IND vs NZ: "55 ரன்கள்" சங்கக்காரா சாதனையை முறியடிக்க தயாரான விராட் கோலி.. கடைசி சான்ஸ் இதுதான்!
துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேற விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 55 ரன்கள் சேர்த்தால், இலங்கை ஜாம்பவான் சங்கக்காராவின் சாதனையை விராட் கோலி முறியடித்து அசத்துவார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். இதுவரை விளையாடி 4 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 217 ரன்களை விளாசி இருக்கிறார்.

அதிலும் துபாய் மைதானத்தில் மற்ற பேட்ஸ்மேன்கள் திணறி வரும் நிலையில், விராட் கோலி ஓடி ஓடி ரன்களை குவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஸ்பின்னர்கள் என்றாலே பயந்து பதுங்கி வந்த விராட் கோலி, இம்முறை விராட் கோலி ஸ்பின்னர்களை பழைய ஸ்டைலில் பேக் ஃபூட்டில் சென்று விளையாடி சாதாரணமாக ரன்களை குவித்து வருகிறார்.
இதனால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மரண மாஸ் கம்பேக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விராட் கோலி 60 சதவிகித ரன்களை ஓடியே எடுத்தது பல்வேறு ஜாம்பவான்களையும் வியக்க வைத்துள்ளது. 36 வயதிலும் விராட் கோலி சிங்கிளாக ஓடி ரன்களை எடுக்கிறார்.
ஆனால் இளம் வீரர்கள் பவுண்டரிகளை விளாசுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். விராட் கோலியின் இன்ஜின் மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட தொடங்கிவிட்டதாக பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைக்க விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களை விளாசி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் இலங்கை ஜாம்பவான் சங்கக்காரா 14,234 ரன்களை விளாசி 2வது இடத்தில் இருக்கிறார். 3வது இடத்தில் விராட் கோலி 14,180 ரன்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு அமைந்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 55 ரன்களை சேர்த்தால், 14,235 ரன்களை விளாசி 2வது இடத்திற்கு முன்னேறுவார். இந்த சான்ஸை விட்டால், அடுத்ததாக விராட் கோலி எப்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்பது அறியாத ஒன்றாகும். 2027 உலகக்கோப்பை வரை விராட் கோலி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டாலும், அந்த சாதனையை இன்றே எட்டிவிட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications