IND vs NZ: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி.. கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? நோட் பண்ணுங்க!
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை அளிக்கப்படும் என்பதை பார்க்கலாம். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக ரூ.60.06 கோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலிடம் பெறும் அணிக்கு ரூ.21.4 கோடியும், 2வது இடத்தில் நிறைவு செய்யும் அணிக்கு ரூ.11.6 கோடியும் பரிசாக அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறுவதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற நிலையில், இம்முறை சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றும் என்று பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கடைசி ஒருநாள் போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. எப்படி டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டு உடனடியாக இளம் தலைமுறைக்கு வழிவிடும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தாரோ, அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றால், ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கும் தோல்வியடையும் அணிக்கும் கிடைக்கும் பரிசுத் தொகை எவ்வளவு என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதன்படி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.60.06 கோடியாகும். 2017 சாம்பியன்ஸ் டிராபியை ஒப்பிடும் போது இந்த பரிசுத்தொகை சுமார் 53 சதவிகிதம் அதிகமாகும்.
இதில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு சுமார் ரூ.19.49 கோடி பரிசாக அளிக்கப்படும். இந்த போட்டியில் தோல்வியடையும் அணிக்கு சுமார் ரூ.9.74 கோடி பரிசாக கிடைக்கும். ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றால் சுமார் ரூ. 21.4 கோடியும், தோல்வியடைந்தால் சுமார் ரூ.11.6 கோடியும் பரிசாக அளிக்கப்படும்.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை தொடரில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு ரூ.33 கோடியும், அந்த இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி ரூ.16 கோடியும் பரிசாக அளிக்கப்பட்டது. அதனை ஒப்பிடும் போது இது குறைவாக இருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இது அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications