சாம்பியன்ஸ் டிராபி பைனல்.. கோல்டன் பேட்டை வெல்லப்போவது யார்? விராட் கோலியுடன் ரேஸில் உள்ள 6 வீரர்கள்
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பேட் விருதை வெல்லப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கோல்டன் பேட்டுக்கான ரேஸில் இந்திய அணியின் 3 வீரர்களும், நியூசிலாந்து அணியின் 4 வீரர்களும் போட்டியில் இருப்பதால், யாருக்கு அந்த விருது கிடைக்கும் என்ற விவாதம் ரசிகர்களிடையே நடந்து வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை மறுநாள் விளையாடவுள்ளன. ஏற்கனவே 2000ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் 25 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

இந்தியா நியூசிலாந்து
சமபலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவதால், ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் இரு அணிகளின் வீரர்கள் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளனர். அதேபோல் துபாய் மைதானத்தின் பிட்ச் ஒருநாள் போட்டிகளுக்காகவே உருவாக்கப்பட்டது போல் செயல்படுவதால், வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும்.
ரேஸில் உள்ள 7 வீரர்கள்
இதனிடையே இறுதிப்போட்டிக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கு கோல்டன் பேட் மற்றும் கோல்டன் பால் விருது அளிக்கப்படும். இதனால் கோல்டன் பேட் விருதை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விருதை கைப்பற்றும் ரேஸில் 7 வீரர்கள் இருக்கிறார்கள்.
விராட் கோலி vs ரச்சின் ரவீந்திரா
அதில் ரச்சின் ரவீந்திரா 3 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உட்பட 226 ரன்களையும், விராட் கோலி 4 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உட்பட 217 ரன்களையும் எடுத்துள்ளனர். அதேபோல் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 4 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உட்பட 195 ரன்களையும் எடுத்து ரேஸில் உள்ளார்.
யாருக்கு கோல்டன் பேட்?
தொடர்ந்து டாம் லேதம் 4 போட்டிகளில் 191 ரன்களும், கேன் வில்லியம்சன் 4 போட்டிகளில் 189 ரன்களும் விளாசி ரேஸில் உள்ளனர். இதனால் விராட் கோலி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரில் யாருக்கு கோல்டன் பேட் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐசிசி உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications