இஞ்சுரி சூப்பர் கிங்ஸ்.. 8வது வீரராக காயம் அடைந்த ஜேமி ஓவர்டன்.. இனி பிளே ஆப் கனவும் ஓவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜேமி ஓவர்டன் காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளார். சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் தீவிரமாக இருக்கும் நிலையில், ஜேமி ஓவர்டனின் காயம் சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உருவாகி இருக்கிறது.

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டி தீவிரம் அடைந்திருக்கிறது. ஆர்சிபி, ஐதராபாத், பஞ்சாப், குஜராத் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் பிளே ஆஃப் ரேஸில் முன்னிலையில் இருக்கின்றன. இதில் சிஎஸ்கே அணி எஞ்சியுள்ள 3 போட்டிகளில் 3லும் வென்றால், எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

CSK

ஆனால் சிஎஸ்கே அணி வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக விலகி வருவது மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக விலகி இருக்கிறார். வலது தொடையில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில், காயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அவர் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் ஜேமி ஓவர்டன் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறி, அடுத்தகட்ட மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக இங்கிலாந்துக்கு விரைந்துள்ளார்.

அங்குள்ள மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவர் சில வாரங்கள் இருக்க வேண்டியிருக்கும் என்பதால், இந்த சீசனின் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் டெத் பவுலராக செயல்பட்டு வந்தார் ஜேமி ஓவர்டன். 10 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதேபோல் எகனாமிக்கலாகவும் பவுலிங் செய்து வந்தார். மணிக்கு 145 கிமீ வேகத்தில் ஜேமி ஓவர்டன் பவுலிங் செய்தது பலருக்கும் வியப்பை அளித்தது. ஏற்கனவே சிஎஸ்கே அணியின் நேதன் எல்லீஸ், கலீல் அஹ்மத், ஆயுஷ் மாத்ரே, தோனி, ஸ்பென்சர் ஜான்சன், ராமகிருஷ்ணா கோஷ் உள்ளிட்ட பலரும் காயம் அடைந்தனர். தற்போது 8வது வீரராக ஜேமி ஓவர்டனும் காயம் அடைந்துவிட்டார்.

இதனால் சிஎஸ்கே அணியின் மருத்துவக் குழு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரே சீசனில் 8 வீரர்கள் காயம் அடையும் வரை மருத்துவக் குழு என்ன செய்கிறது என்ற கேள்விகள் எழுகிறது. இதனால் ஜேமி ஓவர்டன் இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ர கேள்வி எழுந்துள்ளன. பிளே ஆஃப் வாய்ப்பும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+