பிரித்வி ஷா முதல் கார்த்திக் சர்மா வரை.. ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி குறி வைக்கப் போகும் வீரர்கள்!
சென்னை: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் மதியம் 2.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை குறி வைக்கும் என்பதை காணலாம். டாப் ஆர்டர் வீரர்களுக்கான மாற்று வீரர்கள், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர், ஜடேஜாவுக்கான மாற்று வீரர் என்று சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்க வேண்டிய வீரர்களின் பட்டியல் அதிகமாகவே உள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று தொடங்க உள்ளது. இந்த மினி ஏலம் சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் கடந்த சீசனில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. இதனால் இந்த சீசனில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் தோனி தீவிரமாக இருக்கிறார்.

அதற்காகவே சிஎஸ்கே அணி வழக்கத்திற்கு மாறாக டிரேட்டிங்கில் ஈடுபட்டது. அதற்காக சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான ரவீந்திர ஜடேஜாவையே தாரை வார்த்தது. இதனால் சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன் வந்துள்ளார். கடந்த சீசனிலேயே ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ் மற்றும் உர்வில் படேல் ஆகியோரை ஒப்பந்தம் செய்து அசத்தியது.
இதனால் சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, டிவால்ட் பிரெவிஸ் என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் தோனி 8வது பேட்டிங் வரிசையில் தான் விளையாட வாய்ப்புகள் உள்ளது. இதனால் நம்பர் 6ல் மற்றும் நம்பவர் 7ல் விளையாட ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் ஃபினிஷர் அவசியம்.
அதேபோல் டாப் ஆர்டரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், அவர்களுக்கான மாற்று வீரர்களை வாங்குவதும் அவசியம். கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட்டின் காயம் சிஎஸ்கே அணிக்கு எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் சிஎஸ்கே அணி கட்டாயமாக பிரித்வி ஷாவை வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இவர் சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோருக்கு சரியான மாற்று வீரராக இருப்பார்.
அதேபோல் ஜடேஜாவுக்கான மாற்று வீரராக அகில் ஹொசைன் வாங்கப்படலாம். இவர் ஏற்கனவே ஜேஎஸ்கே மற்றும் டிஎஸ்கே அணிகளுக்காக விளையாடி வருகிறார். இதனால் ஃபிளமிங் சிஎஸ்கே அணிக்காகவும் வாங்கப்பட வாய்ப்புள்ளது. மறுபக்கம் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவரையும் வாங்க சிஎஸ்கே அணி திட்டமிடும்.
அதுமட்டுமல்லாமல் ஃபினிஷரான கார்த்திக் சர்மா கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் செட்டப்பில் இருந்தவர். அவரோடு சேர்த்து சன்னி சந்து, டிரவீன் மேத்யூஸ், ஜோஷ் இங்லிஸ் ஆகியோரை வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இளம் வீரரான பதிரானாவை குறைந்த விலைக்கு சிஎஸ்கே அணி வாங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications