சிஎஸ்கே சுதாரிக்க வேண்டிய இடம்.. நம்பர் 5ல் பிரெவிஸ் களமிறங்கணும்.. சிவம் துபே சரிபட்டு வர மாட்டார்!
சென்னை: சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் டிவால்ட் பிரெவிஸ் நம்பர் 5 வரிசையில் களமிறக்கப்பட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. சிவம் துபேவை மட்டும் நம்பி டெத் ஓவர்கள் மற்றும் ஃபினிஷிங் பொறுப்பை ஒப்படைத்தால் பின்னடைவு ஏற்படும் என்பதால், சர்ஃபராஸ் கானை நம்பர் 4 வரிசையில் களமிறக்குவதே சரியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளையும் வீழ்த்தி சிஎஸ்கே அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்த இரு போட்டிகளிலும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாகவே அமைந்தது. அதேபோல் ஸ்பின்னர்கள் மிகச்சிறப்பாக ஃபார்முக்கு வந்துவிட்டனர். இதனால் சிஎஸ்கே அணி அடுத்த போட்டியிலும் வெல்ல வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் சிஎஸ்கே அணி வென்றுவிட்டால், எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் ஒரேயொரு மாற்றம் செய்ய வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணி ஃபினிஷிங் ரோல் பேட்ஸ்மேன்கள் அவ்வளவு பயங்கரமாக இல்லை.
சிவம் துபே, ஜேமி ஓவர்டன் இருவரும் சிக்ஸ் அடிப்பார்கள் என்றாலும், 20 ரன்கள் ஓவர் கிடைக்குமா என்பதே சந்தேகம் தான். ஏனென்றால் சிவம் துபே 5 போட்டிகளிலும் பெரியளவில் ரன்கள் சேர்க்கவில்லை. அவரிடம் அதீத எச்சரிக்கை உணர்வு இருப்பதால், சிஎஸ்கே அணி ஃபினிஷிங் செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது. நேற்றைய ஆட்டத்திலும் கூட சிவம் துபேவால் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரியை கூட அடிக்க முடியவில்லை.
இதனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் சர்ஃபராஸ் கானை நம்பர் 4ல் களமிறக்க வேண்டும். அதேபோல் நம்பர் 4ல் ஆடி வரும் டிவால்ட் பிரெவிஸை நம்பர் 5 அல்லது நம்பர் 6 பேட்டிங் வரிசைக்கு அனுப்ப வேண்டும். ஒருவேளை 15 ஓவர்கள் கடந்துவிட்டால், பிரெவிஸ் களத்திற்கு வரு வகையில் வியூகம் அமைக்க வேண்டும்.
ஏனென்றால் பிரெவிஸ்ஸால் ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆகிய இரு தரப்பையும் விளாசி தள்ள முடியும். இந்த மாற்றத்தை சிஎஸ்கே அணி செய்ய வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக சிஎஸ்கே அணி சேஸிங்கின் போது எளிதாக இலக்குகளை எட்ட தயாராக இருக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இப்படிதான் கேப்டன்சி செய்யணும்.. 2 போட்டிகளிலேயே ருதுராஜ் கொடுத்த மாற்றம்.. தோனிக்கு ஆறுதல்! -
Sanju Samson: 148.2 கிமீ வேகம்.. இதுதான் கம்பேக்.. சஞ்சு சாம்சனை மிரட்டிவிட்ட கார்த்திக் தியாகி! -
ஸ்ரேயாஸ் ஐயர் அருமை இப்போ தெரியுதா.. முதல் வெற்றியை கூட பெற முடியலை.. புலம்பும் கேகேஆர் அணி! -
5வது முறையாக சொதப்பல்.. 7 ரன்களில் அவுட்டான ருதுராஜ் கெய்க்வாட்.. ஃபார்ம் அவுட்டில் சிஎஸ்கே கேப்டன்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications