தினேஷ் கார்த்திக்-காக காத்திருக்கும் சிஎஸ்கே.. ஜாகீர் கானுக்கு 2 ஆண்டு ஒப்பந்தம் கொடுக்கலை! பின்னணி

Subscribe to Oneindia Tamil

மும்பை: சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கானுக்கு நீண்ட காலம் ஒப்பந்தம் கொடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. குறுகிய காலம் ஒப்பந்தம் என்ற காரணத்தினாலேயே ஜாகீன் கானும் பொறுப்பை ஏற்க சில காலம் எடுத்து கொண்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பதவி விலகிய நிலையில், அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக சிஎஸ்கே பயிற்சியார்ள் யார் என்பது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. இயன் மோர்கன், ஆல்பி மோர்க்கல், மைக் ஹசி, ஹேமங் பதானி என்று ஏராளமான பெயர்கள் பேசப்பட்டன.

CSK

ஆனால் இறுதியாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மும்பை அணியின் பவுலிங் பயிற்சியாளராகவும், லக்னோ அணியின் ஆலோசகராகவும் ஜாகீன் கான் பணியாற்றி இருக்கிறார். சிஎஸ்கே அணியின் தரப்பில் ஜாகீர் கானுடன் பேசப்பட்ட போது, அவர் உடனடியாக இந்த பொறுப்பை ஏற்க முன் வரவில்லை என்று தெரிகிறது.

அதன் பின்னணியில் சிஎஸ்கே அணியின் ஒப்பந்தம் தான் காரணம். ஏனென்றால் சிஎஸ்கே அணி சார்பாக நீண்ட ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கொடுக்க முன் வரவில்லை. ஹேமங் பதானியும் இதன் காரணமாகவே விலகியதாக தெரிகிறது. ஓராண்டு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் சில உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டு ஒப்பந்தம் கூட இல்லாமல், மினி ஏலத்தில் எப்படியொரு அணியை உருவாக்கி வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்று ஹேமங் பதானி உள்ளிட்டோர் கேட்டதாக தெரிகிறது. இத்தனை கருத்துக்களையும் ஆராய்ந்த பிறகே, ஜாகீர் கான் பொறுப்பை ஏற்க முன் வந்திருக்கிறார். இதற்கு தோனியும் ஒரு காரணம் என்று பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணி நீண்ட கால ஒப்பந்தம் கொடுக்க முன் வராததற்கு தினேஷ் கார்த்திக் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஆர்சிபி அணி உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின், அவர் சிஎஸ்கே அணியில் இணைய ஆவலாக இருக்கிறார். சிஎஸ்கே நிர்வாகமும் தினேஷ் கார்த்திக்கும் நெருங்கிய உறவில் இருக்கின்றனர். இதன் காரணமாகவே யாருக்கும் நீண்ட கால ஒப்பந்தம் கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முன் வரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+