சிஎஸ்கே தான் சொதப்பிட்டாங்க.. ஆனால் டிஎஸ்கே அப்படி இல்ல தம்பி.. வெறியாட்டம் ஆடிய டூ பிளெசிஸ்!

Subscribe to Oneindia Tamil

டல்லாஸ்: அமெரிக்காவில் கோலாகலமாகத் தொடங்கியுள்ள எம்எல்சி தொடரின் முதல் லீக் போட்டியில், டிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரைரி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், 221 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து டிஎஸ்கே அணி தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

டாஸ் வென்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களம் இறங்கிய சியாட்டில் ஆர்காஸ் அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களை விளாசியது. அதிரடியாக விளையாடி டிம் செய்ஃபெர்ட் 66 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 104 ரன்களை விளாசினார்.

CSK

இதன்பின் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் முக்காமல்லா டக் அவுட்டாகினார். எனினும், கேப்டன் டூ பிளெசிஸ் மற்றும் ரோசோவ் ஆகிய இருவரும் சியாட்டில் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்ட இந்த ஜோடி, பவர்பிளே முடிவில் 6 ஓவர்களில் 89 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிப் பாதைக்கு அடித்தளமிட்டனர். அதிரடியாக விளையாடிய ரைலி ரோசோவ் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் டூ பிளெசிஸ் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சியாட்டில் பந்துவீச்சாளர்களின் உத்திகளை தவிடுபொடியாக்கிய அவர், வெறும் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 7 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 113 ரன்கள் குவித்து அசத்தினார்.

இறுதிக்கட்டத்தில் வியான் முல்டர் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அதிரடி காட்ட, டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 221 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றியைப் பெற்றது. இன்னும் 9 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இந்த அசாத்திய சேஸிங்கை டெக்சாஸ் அணி முடித்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+