பிளமிங்கை திட்டுவதற்கு முன்.. முதலில் பிளே ஆப் போங்க ஹேமங் பதானி.. சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டல்
மும்பை: ஐபிஎல் தொடரின் பிளே ஆப் வாய்ப்பை டெல்லி அணி இழந்துவிட்ட நிலையில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானியை சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தும், டிரால் செய்தும் வருகின்றனர். சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங்கை விமர்சிப்பதற்கு முன் ஹேமங் பதானி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி இருக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வென்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான ரேஸில் டெல்லி அணி முன்னிலை பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் மும்பை அணி வென்றதால், டெல்லி அணியின் பிளே ஆஃப் கனவுக்கு முடிவுக்கு வந்துள்ளது.

முதல் 6 போட்டிகளில் 5ல் வென்ற டெல்லி அணி, அடுத்த 7 போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வென்று, 6ல் தோற்றிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறும் முதல் அணி டெல்லி கேபிடல்ஸ் தான். இந்த தோல்விக்கு சீனியர் வீரர்கள் இல்லாதது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் சீனியர் வீரர்கள் இருந்த போதும், டெல்லி அணியால் கடந்த சில போட்டிகளை வெல்ல முடியவில்லை. இதற்கு அந்த அணியின் மோசமான பேட்டிங் வரிசையே காரணமாகும். இந்த நிலையில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த டெல்லி அணியை சிஎஸ்கே அணி ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். குறிப்பாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானியை மோசமாக கலாய்த்து வருகின்றனர்.
ஏனென்றால் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் குறித்து ஹேமங் பதானி பேசிய போது, சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ஸ்டீபன் ஃபிளமிங் காரணம் அல்ல. அவரால் எஸ்ஏ20 லீக், எம்எல்சி லீக் தொடர்களில் ஏன் வெற்றிபெற முடியவில்லை. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வென்றதற்கு தோனியின் கேப்டன்சியே காரணம்.
தோனியின் கேப்டன்சியால் மட்டுமே ஃபிளமிங் தப்பித்து கொண்டிருப்பதாக விமர்சித்திருந்தார். இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சிஎஸ்கே அணி ஆடியுள்ள 16 சீசன்களில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. எஸ்ஏ20 மற்றும் எம்எல்சி லீக் தொடர்களிலும் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி வந்துள்ளது.
பிளே ஆஃப் சுற்றில் என்ன நடந்தாலும், அன்றைய நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றிபெற முடியும். இதனால் ஹேமங் பதானி சாதித்துவிட்டு ஃபிளமிங்கை விமர்சிக்கட்டும் என்றும், கையில் இருந்த வாய்ப்பை சிஎஸ்கே அணி இவ்வளவு மோசமாக இழக்காது என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications