விட்டுப்பிடித்த சென்னை அணி.. 180 டிகிரி மாறிய வியூகம்.. மினி ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே டீம் இதுதான்!
சென்னை: அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஏலத்தில் பொறுமையாக இருந்த சென்னை அணி எந்த இடத்திலும் அவசரம் காட்டவில்லை. வழக்கமாக அனுபவம் வாய்ந்த வீரர்களையே அதிகம் எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை திட்டத்தை மாற்றி உள்ளூர் இளம் வீரர்களை அதிகம் ஏலத்திற்கு எடுத்தது.
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவாகக் கருதப்படும் ஐபிஎல் தொடருக்குச் சர்வதேச அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மற்ற கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்காதவர்கள் கூட ஐபிஎல் தொடரை நிச்சயம் பார்ப்பார்கள். இந்த ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் 26ம் தேதி ஆரம்பிக்கிறது. இதற்கிடையே 19வது ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் செவ்வாய்க்கிழமை அபுதாபியில் நடைபெற்றது.

மினி ஏலம்
10 அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்ற நிலையில், அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரரைக் குறிவைத்துத் தூக்கியது. இந்த மினி ஏலத்தில் கொல்கத்தா (64 கோடி) மற்றும் சென்னை அணிகள் (43 கோடி) அதிகபட்சத் தொகையுடன் களமிறங்கின. இதனால் இந்த இரு அணிகளும் தான் நட்சத்திர வீரர்களை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
விட்டுப்பிடித்த சிஎஸ்கே
இருப்பினும், சிஎஸ்கே தனது திட்டத்தை மாற்றியது. கிரீனுக்கு ரூ.25 கோடி வரை கேட்ட சென்னை பிறகு பின்வாங்கியது. ரவி பிஷ்னாய் ஜேசன் ஹோல்டர், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகிய நட்சத்திர வீரர்களுக்கும் சென்னை ஏலம் கேட்டபோதிலும் ஓரளவுக்குத் தொகை அதிகரித்ததும் பின்வாங்கிவிட்டது. பத்திரனா, வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஏலம் கேட்கக் கூட இல்லை. தனக்கு வேண்டிய வீரர்கள் வரும் வரை சிஎஸ்கே காத்திருந்தது.
மொத்தமாக மாறிய திட்டம்
மேலும், எப்போதும் சிஎஸ்கே அனுபவம் வாய்ந்த வீரர்களையே எடுக்கும். எவ்வளவு திறமை இருந்தாலும் அத்தோடு அனுபவமும் தேவை என்றே சிஎஸ்கே பார்க்கும். ஆனால், இந்த முறை சென்னை தனது வியூகத்தை மொத்தமாக மாற்றியது. சிஎஸ்கே ரூ.14+ கோடி கொடுத்த பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் ஷர்மா ஆகிய இருவருமே இளம் வீரர்கள். இதை வைத்துப் பார்த்தாலே சிஎஸ்கே பிளான் மொத்தமாக மாறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
சிஎஸ்கே அணியில் இந்த முறை இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
பேட்ஸ்மேன்கள்: சரஃபராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், டேவால்ட் பிரெவிஸ் (தென்னாப்பிரிக்கா).
கீப்பர்கள்
எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், கார்த்திக் ஷர்மா, உர்வில் பட்டேல்
ஆல்-ரவுண்டர்கள்
ஷிவம் தூபே, ராமகிருஷ்ண கோஷ், பிரசாந்த் வீர், அமன் கான், ஆயுஷ் மகாத்ரே, மேத்யூ ஷார்ட் (ஆஸ்திரேலியா), ஜேமி ஓவர்டன் (இங்கிலாந்து), ஜகரி ஃபோல்க்ஸ் (நியூசிலாந்து)
பவுலர்கள்
கலீல் அகமத், ராகுல் சஹார், ஸ்ரேயாஸ் கோபால், அன்ஷுல் காம்போஜ், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்நீத் சிங், அக்கீல் ஹொசைன் (மேற்கிந்தியத் தீவுகள்), மாட் ஹென்ரி (நியூசிலாந்து), நூர் அஹ்மத் (ஆப்கானிஸ்தான்), நாதன் எல்லிஸ் (ஆஸ்திரேலியா).
-
மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது எப்படி? கார்த்திக் சர்மா, உர்வில் படேலுக்கு பாடம் எடுத்த தோனி! -
வருங்கால சிஎஸ்கே கேப்டன்.. ஆயுஷ் மாத்ரே பேட்டிங் ஆர்டரில் மாற்றம்.. ருதுராஜ் கொடுத்த மெகா அப்டேட்! -
ஐபிஎல் தொடரில் RCB இல்லை? பெயரை மாற்ற புதிய உரிமையாளர்கள் திட்டம்? வந்த திடீர் விளக்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications