நீங்களாம் மனுஷங்களே கிடையாது.. 45 டாட் பால்கள்.. கொடூரமாக பேட்டிங் செய்த டிவால்ட் பிரெவிஸ்!
சென்னை: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்கள் மொத்தமாக 45 டாட் பால்களை ஆடி இருப்பது ரசிகர்களிடையே கொந்தளிக்க வைத்துள்ளது. சுனில் நரைன் மட்டும் 11 டாட் பால்கள் வீசியுள்ள நிலையில், வேகப்பந்துவீச்சாளர்களின் ஒய்டு யார்க்கர் திட்டத்தை கூட சிஎஸ்கே பேட்ஸ்மேன்களால் முறியடிக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்துள்ளது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 48 ரன்களும், டிவால்ட் பிரெவிஸ் 29 பந்துகளில் 41 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 38 ரன்களும் எடுத்தனர்.

சிஎஸ்கே அணி 6 ஓவர்கள் முடிவில் 72 ரன்களை எடுத்திருந்தது. இதனால் 20 ஓவர்களில் 220 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணி கடைசி 4 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே எடுத்தது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி வீரர்கள் அதிக டாட் பால்களை விளையாடி இருக்கின்றனர். அதுவே சிஎஸ்கே அணியின் ஸ்கோர் மொத்தமாக குறைய காரணமாக அமைந்துள்ளது.
மொத்தமாக 45 டாட் பால்களை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஆடி இருக்கின்றனர். அதிலும் நட்சத்திர வீரர் டிவால்ட் பிரெவிஸ் 29 பந்துகளில் 11 பந்துகளை டாட் பாலாக ஆடி இருக்கிறார். காயத்திற்கு பின் விளையாடும் முதல் போட்டி என்பதாலும், சேப்பாக்கம் மைதானத்தில் ஆடும் போட்டி என்பதாலும் டிவால்ட் பிரெவிஸால் சரியாக பிட்சை கணிக்க முடியவில்லை என்று பார்க்கப்படுகிறது.
ஆனால் சஞ்சு சாம்சனும் இன்று அதிக டாட் பால்களை ஆடி இருக்கிறார். சுனில் நரைன் மட்டும் கேகேஆர் அணிக்காக 11 டாட் பால்களை வீசியுள்ளார். அதேபோல் ஸ்பின்னரான அனுகுல் ராய் 9 டாட் பால்களையும், வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி 9 டாட் பால்களையும், வைபவ் அரோரா 7 டாட் பால்களையும், வருண் சக்கரவர்த்தி 6 டாட் பால்களையும், கேமரூன் க்ரீன் 3 டாட் பால்களையும் வீசியுள்ளார்.
இந்த 45 டாட் பால்களில் ஒரு 20 ரன்களை எடுத்திருந்தாலே, சிஎஸ்கே அணியால் எளிதாக 210 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்திருக்க முடியும். கேகேஆர் அணியின் ஒய்டு யார்க்கர் திட்டத்தை சிஎஸ்கே அணியால் முறியடிக்க முடியவில்லை. பேட்ஸ்மேன்கள் மொத்தமாக ஒய்டு யார்க்கர் பந்துகளை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தடுமாறியது வெளிப்படையாகவே தெரிந்தது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications