சிஎஸ்கே தோல்விக்கான 3 காரணங்கள்.. இனியும் பிளே ஆஃப் சான்ஸ் இருக்கா? அடுத்த 2 போட்டிகள் முக்கியம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் இந்த தோல்வியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய கார்த்திக் சர்மா 42 பந்துகளில் 71 ரன்களை விளாசினார்.

CSK

இதன்பின் களமிறங்கிய லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது. அதிரடியாக ஆடிய மிட்சல் மார்ஷ் 38 பந்துகளில் 7 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 90 ரன்களை விளாசினார். கடைசி நேரத்தில் பூரன் 17 பந்துகளில் 32 ரன்களை விளாசினார். சிஎஸ்கே அணியின் அன்சுல் கம்போஜ் வீசிய 2.4 ஓவர்களில் 63 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு 3 முடிவுகள் காரணமாக அமைந்துள்ளது. முதல் முடிவு இம்பேக்ட் பிளேயராக அகீல் ஹொசைனை களமிறக்காமல், குர்ஜப்னீத் சிங்கை களமிறக்கியது. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் முகேஷ் சவுத்ரி மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் என்று இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். பிட்சில் இருக்கும் பவுன்ஸை பயன்படுத்தி இவர்களாலும் ஷார்ட் பால்களை வீச முடியும்.

ஷாபாஸ் அஹ்மத் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால், அகீல் ஹொசைனை களமிறக்கும் முடிவில் இருந்து சிஎஸ்கே பின்வாங்கவில்லை. டாஸின் போதே ருதுராஜ் கெய்க்வாட் குர்ஜப்னீத் சிங் தான் இம்பேக்ட் பிளேயர் என்று கூறிவிட்டார். அகீல் ஹொசைனால் இந்த பிட்சில் இருந்த பவுன்ஸை பயன்படுத்தி ஒரு சில விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க முடியும்.

அதேபோல் முதல் ஓவரிலேயே முகேஷ் சவுத்ரியால் பவுன்ஸை பயன்படுத்தி கொள்ள முடிந்தது. ஆனால் பவர் பிளேவில் முகேஷ் சவுத்ரியை ஒரே ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அட்டாக்கில் இருந்து வெளியேற்றினார். மறுபுறம் பிரசாந்த் வீர்ரை பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடியது. அவரது இடத்தில் சர்ஃபராஸ் கானை களமிறக்கி இருக்கலாம். இதனால் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அடுத்த 2 போட்டிகளில் சிஎஸ்கே அணி ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகளை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த 2 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது தொடர்பாக சிந்திக்கவே முடியும். அதேபோல் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+