ஜி பிரேம் பாருங்க ஜி.! ’தல’ தோனி என்ட்ரியால் அதிர்ந்த சேப்பாக்கம்! காதை பொத்திக் கொண்ட நீதா.. வீடியோ
சென்னை: ஐபிஎல் 18 தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. போட்டியின் கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் ஆக மாஸாக என்ட்ரி கொடுத்தார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அப்போது ரசிகர்கள் தல தல என ஆர்ப்பரிக்க, சத்தத்தை கேட்க முடியாமல் மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி காதை பொத்திக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
எதிர்பார்த்தது போல ஐபிஎல் 18 சீசன் தொடங்கி விட்டது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட், பேட்டிங்கை தவிர்த்து பீல்டிங்கை தேர்வு செய்தார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொருத்தவரை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் சாதுரியமாக ருத்ராஜ் பில்டிங்கை தேர்வு செய்தார். நினைத்தது போலவே சுழல் வீரர்கள் கை கொடுக்க மும்பை இந்தியன்ஸ் வெறும் 155 ரன்கள் 9 விக்கெட் இழந்தது.
சூரியகுமார் யாதவ் திலக் வர்மா மட்டுமே ஓரளவுக்கு தாக்குப் பிடித்தனர். சென்னை அணியை பொறுத்தவரை நூர் அகமது, கலீல் அகமது, அஸ்வின் சுழல் கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது. குறைந்த ஸ்கோர் தான் என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதுமுக வீரனான விக்னேஷ் புதூர் சீனியர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை பதம் பார்த்தார். மூன்று விக்கெட்டுகளை அவர் சாய்க்க இறுதிவரை போராடியே 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்தது.

கடைசி நேரத்தில் ஒரு சிறிய தவறால் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட்டாக ரசிகர்களின் பலத்த ஆரவாரத்திற்கு இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளே வந்தார். வழக்கம் போல ரவீந்திர ஜடேஜா அவுட் ஆக வேண்டும் தோனி உள்ளே வரவேண்டும் என வேண்டிக் கொண்டு இருந்த ரசிகர்கள் வயிற்றில் பால் பார்த்தது போல இருந்தது இந்த நிகழ்வு. கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்த நிலையில் 'பொட்டு வச்ச தங்க குடம்' பாடலோடு தோனி உள்ளே வந்தார்.

தோனி உள்ளே வரும்போது அவருக்கு அருகே மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நீதா அம்பானி அமர்ந்திருந்தார். மகேந்திர சிங் தோனியை வீடியோ எடுத்தபடி ரசிகர்கள் பலத்த கரகோஷமும் முழக்கமும் எழுப்ப சேப்பாக்கம் மட்டுமல்லாது வங்க கடலே அலறியது. 120க்கும் மேற்பட்ட டெசிபல் ஒலி எழுந்த நிலையில் சத்தத்தை தாங்க முடியாமல் நீதா அம்பானி காதை பொத்திக் கொண்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Nita Ambani ji closing her ears during MS Dhoni’s entry 🥶🔥 pic.twitter.com/lPtCJYh2Kw
— (@WorshipDhoni) March 24, 2025
தொடர்ந்து தோனியின் சிக்சருக்காக ரசிகர்கள் காத்திருந்தாலும் இரு பந்துகள் 'டொக்' வைத்த தோனி பிறகு சச்சின் ரவிந்த்ராவுக்கு வின்னிங் ஷாட் அடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். அவரும் சிக்ஸர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications