சூப்பர்மேன் போல் பறந்து பிடித்த சர்பராஸ் கான்.. ஸ்டன்னான சேப்பாக்கம்.. டெல்லி கோச் கொடுத்த ரியாக்சன்
சென்னை: டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் அடித்த பந்தை, சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் சூப்பர்மேன் போல் தாவி கேட்ச் பிடித்த சம்பவம் ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ஃபராஸ் கானின் கேட்ச் காரணமாக சேப்பாக்கம் மைதானமே ஒரு நொடி ஸ்டன்னாகியது. இதையடுத்து சர்ஃபராஸ் கான் பந்தை கையில் எடுத்து சில நொடிகள் ரசிகர்களை நோக்கி ஓடியது உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 4 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 115 ரன்களை குவித்தார். அதேபோல் ஆயுஷ் மாத்ரே 36 பந்துகளில் 59 ரன்களை எடுத்து ரிட்டையர்ட் அவுட்டானார்.

இதையடுத்து 213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணியின் நிசாங்கா - கேஎல் ராகுல் கூட்டணி களமிறங்கியது. கலீல் அஹ்மத் வீசிய 2வது ஓவரிலேயே நிசாங்கா மற்றும் கேஎல் ராகுல் வெளுத்து கட்டினர். தொடர்ந்து அகீல் ஹொசைன் பந்திலும் பவுண்டரிகள் அடிக்கப்பட, அன்சுல் கம்போக் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரிலும் நிசாங்கா சிக்ஸ் அடித்து மிரட்டினார்.
தொடர்ந்து கலீல் அஹ்மத் வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தில் கேஎல் ராகுல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அன்சுல் கம்போஜ் வீசிய 6வது ஓவரில் நிசாங்கா 41 ரன்களில் வெளியேறினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ரன்களை எடுத்திருந்தது. அப்போது அறிமுக வீரரான குர்ஜப்னீத் சிங் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
அவர் வீசிய முதல் பந்திலேயே அக்சர் படேல் கட் அடிக்க, அதனை பாய்ண்ட் திசையில் நின்றிருந்த சர்ஃபராஸ் கான் சூப்பர்மேன் போல் தாவி பிடித்தார். சர்ஃபராஸ் கானின் கேட்ச்சால் ஒரு நிமிடம் சேப்பாக்கம் மைதானமே ஸ்டன் ஆகியது. அப்படியொரு கேட்ச் பிடித்த மகிழ்ச்சியில் சர்ஃபராஸ் கான் பந்தை எடுத்துக் கொண்டு ரசிகர்களை நோக்கி சில நொடிகள் ஓடிக் கொண்டே இருந்தார். இதனை பார்த்த டெல்லி கோச் ஹேமங் பதானி டென்ஷாகினார்.
சர்ஃபராஸ் கானின் ஃபிட்னஸ் தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் உடல் எடையை குறைத்த சர்ஃபராஸ் கான், தற்போது ஃபீல்டிங்கிலும் மிரட்டலாக செயல்பட்டு வருகிறார். இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications