இதுதான் ட்விஸ்ட்.. ராஜஸ்தான் அணியில் ஜடேஜா, பதிரானா.. சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் வருவது உறுதி!
மும்பை: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேட் மூலமாக வாங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரானா இருவரும் ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 15ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், நவம்பர் 15ஆம் தேதி ஒவ்வொரு அணியும் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டிய நிலை உள்ளது. அதன் பின் டிரேட்டின் விண்டோ முடியும் என்பதால், டிரேட் செய்வதற்கான வேலைகளை அனைத்து அணிகளும் தீவிரப்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் டிரேட் செய்யப்பட உள்ளதாக பேச்சுகள் அடிபட்டன. ஆனால் சிஎஸ்கே அணி முற்றிலும் மறுத்து வந்தது. ராஜஸ்தான் அணியின் நிர்வாகிகள் உடனான மோதல் காரணமாக சஞ்சு சாம்சன் தன்னை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிவிட்டார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு நிகரான மாற்று வீரரை கொண்டு வர ராஜஸ்தான் அணி தீவிரமாக உள்ளது.
சிஎஸ்கே அணியுடனான டிரேட் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனுக்கு நிகரான மாற்று வீரரை கொடுக்குமாறு கோரியது. அதற்கு சிஎஸ்கே தரப்பில் பணம் கொடுத்துவிடுகிறோம் என்று பேசப்பட்டது. ராஜஸ்தான் அணி ஏற்கவில்லை. ஜடேஜா அல்லது சிவம் துபேவை ராஜஸ்தான் கோரியது.
இந்த நிலையில் டிரேட் பேச்சுவார்த்தைக்குள் தோனியும் கால் பதித்தார். சஞ்சு சாம்சனை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று தோனியும் முயற்சிகளை மேற்கொண்டார். இறுதியாக ஜடேஜாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அவரும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் அணி ஜடேஜாவுடன் நிறுத்துவதாக இல்லை.
அவர்கள் பதிரானா மீதும் கண் வைத்திருக்கின்றனர். ஆனால் சாம் கரணை கொடுக்க சிஎஸ்கே அணி தயாராக இருக்கிறது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருவதை அவரின் டிரெய்னரான ராஜா மணி உறுதி செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் படையப்பா பாடலுடன் மஞ்சள் நிறத்தினாலான சிங்கத்தின் எமோஜியை சாம்சனின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மறுபக்கம் பதிரானாவின் மேனேஜர் பிங்க் நிறத்தை பதிவிட்டு லோடிங் என்று எழுதி இருக்கிறார். இதனால் விரைவில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிரேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜாவை டிரேட் செய்வது சிஎஸ்கே ரசிகர்களிடையே கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications