அந்த ஒரு முடிவு.. ஹர்திக் பாண்டியாவை பின்பற்றுவாரா ருதுராஜ் கெய்க்வாட்.. சிஎஸ்கேவுக்கு ஆப்பு உறுதி!
சென்னை: மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே சீனியர் வீரரான ரோஹித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக விளையாட வைத்து மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுத்தார். அதேபோல் இந்த சீசனில் கடந்த போட்டியில் ரோஹித் சர்மாவை காயம் என்று பெஞ்சில் அமர வைத்து, களமிறங்கினார் ஹர்திக் பாண்டியா. அதுபோல் தோனியை கடந்து ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியில் முடிவு எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் 15 ஆண்டுகளுக்கு பின் டெல்லி அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி காரணமாக சிஎஸ்கே அணி ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஹாட்ரிக் தோல்வி காரணமாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

பேட்ஸ்மேனாக சொதப்பும் தோனி
இதனால் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அடைந்த மோசமான தோல்வியை போல் இந்த சீசனில் சிஎஸ்கே அடையும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கப் போகும் முடிவுகளில் தான் அந்த அணியின் எதிர்காலம் அமையப் போகிறது. ஏனென்றால் 43 வயதாகும் தோனி, சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேனாக எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை.
தோனிக்கு ஓய்வு?
கடந்த 2 சீசன்களில் தோனி விக்கெட் கீப்பராக மட்டுமே சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். அதனை சாதாரண இளம் விக்கெட் கீப்பரால் கூட செய்ய முடியும். பேட்டிங் ஃபினிஷராக களமிறங்கும் தோனி, ரன் ரேட்டுக்காக களத்தில் இருப்பதற்கு பதில் வெற்றியை நோக்கி ஓடுபவராக இருக்க வேண்டும். இதனால் இந்த சீசனிலேயே ருதுராஜ் கெய்க்வாட் சில போட்டிகளில் தோனிக்கு ஓய்வு கொடுக்க முடிவு எடுக்க வேண்டும்.
ஹர்திக் எடுத்த முடிவு
கடந்த சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கிய போது, கடைசி சில போட்டிகளில் ஃபார்மில் இல்லாத ரோஹித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடினார். இந்த சீசனில் ரோஹித் சர்மாவை பெஞ்ச் செய்து அதிர்ச்சி கொடுத்தார். இத்தனைக்கு ரோஹித் சர்மா போட்டிக்கு 2 மணி நேரத்திற்கு முன்பு வரை கூட பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
பின்பற்றுவாரா ருதுராஜ்?
இதனால் அணிக்கு சிக்கல் என்றால், எந்த வீரரையும் நீக்குவதற்கு ருதுராஜ் கெய்க்வாட் தைரியமாக முடிவு எடுக்க வேண்டும். இதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற போது, சீனியர் வீரர்களான கங்குலி, கும்ப்ளே உள்ளிட்டோரை தைரியமாக நீக்கினார். இதனால் தோனியை நீக்கும் முடிவை எடுத்து ருதுராஜ் கெய்க்வாட் வென்றால், அது சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் உத்வேகத்தை அளிக்கும்.
கேப்டன்சியில் சிக்கல்
அதேபோல் இந்த சீசனுக்கு பின் தோனி விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால், அதற்கான அணியையும் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கேப்டன்சியில் சொதப்பி வரும் ருதுராஜ் கெய்க்வாட், தோனியின் உதவி இல்லாமல் களத்தில் திட்டங்களை செயல்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications