19 பந்துகளில் அரைசதம்.. குட்டி ஏலியன் பிரெவிஸ் அடித்த அந்த சிக்ஸ்.. வியந்து பார்த்த தல தோனி!
அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான டிவால்ட் பிரெவிஸ் 19 பந்துகளில் அரைசதம் விளாசி இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசி 2 ஓவர்களில் பிரெவிஸ் அடித்த சிக்சர் ஷாட்கள், சிஎஸ்கே கேப்டன் தோனியையும் வியக்க வைத்திருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்களை விளாசி தள்ளியது. சிறப்பாக தொடங்கிய ஆயுஷ் மாத்ரே 2வது ஓவரிலேயே 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 28 ரன்களை விளாசி தள்ளினார்.

தயாரான சிஎஸ்கே
அதேபோல் கடைசி நேரத்தில் வந்த டிவால்ட் பிரெவிஸ் 23 பந்துகளில் 5 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 57 ரன்களை விளாசினார். இந்த சீசனில் சிஎஸ்கே அணி அடித்துள்ல அதிகபட்ச ஸ்கோர் இதுதான். சிஎஸ்கே வீரர்கள் ஒரு வழியாக ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கான அணியும் தயாராகிவிட்டதாக பார்க்கப்படுகிறது.
அசத்திய டிவால்ட் பிரெவிஸ்
இந்த சீசனில் டிவால்ட் பிரெவிஸின் ஆட்டத்தை தோனி ஓய்வறையில் அமர்ந்து ரசித்தது ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது. சிஎஸ்கே அணி பாதி சீசன் விளையாடி முடித்த நிலையில், டிவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் சிஎஸ்கே அணிக்காக ஆடிய ஒவ்வொரு போட்டியிலும் 42, 32, 0, 53, 42, 57 ஆகிய ரன்களை விளாசி இருக்கிறார்.
சிராஜ் ஓவரில் சம்பவம்
இன்றைய ஆட்டத்தில் 19வது ஓவரை வீசுவதற்காக சிராஜ் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பிரெவிஸ் பவுலரின் தலைக்கு மேல் சிக்ஸ் அடிக்க, 2வது பந்தில் லாங் ஆன் திசையில் சிக்சரை விளாசினார். இந்த சிக்சரை பார்த்து தோனி வியந்து கைகளை தட்ட, பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் புல் ஷாட் மூலமாக ஒரு சிக்சரை விளாசி தள்ளினார்.
வியந்த தோனி
அகமதாபாத் போன்ற பெரிய மைதானத்தில் எளிதாக பிரெவிஸ் எளிதாக அடுத்தடுத்த சிக்சரை விளாசியது தோனியையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. 19 பந்துகளில் அரைசதம் அடித்த பிரெவிஸ்-க்கு சிஎஸ்கே அணியின் ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் குட்டி ஏலியன் சிஎஸ்கே அணியின் நிரந்தர வீரராக மாறிவிட்டதாகவும் கொண்டாடி வருகிறார்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications