"தலைவா.. ஈ சாலா கப் நம்தே" சென்னை வந்த விராட் கோலி.. மரண மாஸ் வரவேற்பு கொடுத்த ஆர்சிபி ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அடுத்ததாக ஆர்சிபி அணியுடன் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது. இதனையொட்டி சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஆர்சிபி அணி வீரர்களுக்கு அந்த அணியின் ரசிகர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விராட் கோலியை "தலைவா.. தலைவா" என்று ரசிகர்கள் அழைத்தது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியான கேகேஆர் - ஆர்சிபி இடையிலான ஆட்டத்திற்கு போதிய கவனம் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஆடிய ஆட்டத்தின் மூலமாக ஐபிஎல் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது.

ipl 2025 rcb virat kohli 2025

இந்த நிலையில் சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து விளையாடுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டி மார்ச் 28ஆம் தேதி நடக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை நாளை காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

வழக்கம் போல் ஆன்லைனிலேயே டிக்கெட் விற்பனை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுக்கான குறைந்தபட்ச விலையாக ரூ.1,700 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆர்சிபி அணி வீரர்கள் இன்று சென்னை வந்திறங்கி இருக்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் ரசிகர்கள் மாஸ் வரவேற்பு அளித்தனர்.

குறிப்பாக விராட் கோலியை "தலைவா.. தலைவா.. ஈ சாலா கப் நம்தே" ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். சென்னையில் ஆர்சிபி அணிக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்தது அந்த அணி வீரர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆர்சிபி அணி தங்களின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எளிதாக வீழ்த்தி அசத்தி இருக்கிறது.

இந்த நிலையில் முதல் போட்டியில் வென்ற இரு அணிகளும் மோதவுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் அபார வெற்றியை பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+