கொடுமை.. கோமாவில் 2003 உலகக்கோப்பை நாயகன்.. ஆஸ்திரேலியா ஜாம்பவானுக்கு இப்படியொரு நிலையா!
சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் டேமியன் மார்ட்டின் செயற்கை கோமா நிலையில் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத இன்னிங்ஸை ஆடிய டேமியன் மார்ட்டினுக்கு இப்படியொரு நிலைமையா என்று ரசிகர்கள் பலரும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாத ஆட்டம் என்றால், அது 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியாக தான் இருக்கும். ஏனென்றால் இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு பார்த்த போது, அந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தவர்கள் மூன்று பேர். அதில் முதல் நபர் ரிக்கி பாண்டிங், 2வது வீரர் கிளென் மெக்ராத், 3வது வீரர் டேமியன் மார்ட்டின்.

ஏனென்றால் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடிய 50 ஓவர்களில் 358 ரன்களை குவித்தது. ரிக்கி பாண்டிங் சதம் விளாசி மிரட்டல் இன்னிங்ஸை ஆடிய போது, மறுமுனையில் நிதானமாக டேமியன் மார்ட்டின் 88 ரன்களை குவித்து களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களில் அழகான கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர். சுமார் 14 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்தவர்.
2006ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருடன் ஓய்வை அறிவித்த டேமியன் மார்ட்டின், ஆஸ்திரேலியா ஜாம்பவான்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்தார். இதன்பின் வர்ணனையாளராக செயல்பட்ட அவர், பின்னர் குடும்பத்தினருடன் மட்டுமே நேரம் செலவிட்டு வந்தார். இதனால் டேமியன் மார்ட்டின் என்ன செய்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது.
இந்த நிலையில் குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் டேமியன் மார்ட்டின் செயற்கை கோமா நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மூளைக்காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டேமியன் மார்ட்டின், தற்போது தீவிர சிகிச்சையில் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை டேமியன் மார்ட்டினின் நண்பர் ஆடம் கில்கிறிஸ்ட்டும் உறுதி செய்திருக்கிறார். டேமியன் மார்ட்டினை அவரின் மனைவி அமண்டா மற்றும் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். சவாலான இந்த சூழலில், டேமியன் மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தாங்கம் இருப்பதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் கூறியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications