Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் பார்த்த ஒரு பார்வை.. அவமதித்தாரா பிரதமர் மோடி? உண்மையில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மேடையில் நிற்கும் நிலையில், பிரதமர் மோடி, அவரை கண்டுகொள்ளாமல் அவமதித்துச் செல்வதாக வீடியோவுடன் சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். நடந்தது என்ன?

ஐசிசி உலக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர்.

Did PM Narendra Modi insult Australia captain pat Cummins? What happened in World cup celebration?

ஆஸ்திரேலியா அபார வெற்றி: இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அபாய கட்டத்தில் இருந்தது. ஆனால், ட்ராவிஸ் ஹெட், லபுசேன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து நங்கூரம்போல் நிலைத்து நின்று அணியை வெற்றிக் கோட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்த கூட்டணியை முறித்து, ஆஸி அணிக்கு முட்டுக்கட்டை போட இந்திய அணி எடுத்த எந்த வியூகமும் கைகொடுக்கவில்லை.

ட்ராவிஸ் ஹெட்டின் ஆட்டம் இந்தியாவின் உலக கோப்பை கனவைத் தகர்த்தது. 43 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6வது முறையாக சாம்பியன் ஆனது. இந்த உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் தொடர்ந்து வென்ற இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் அதிர்ச்சி அளித்து கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. இந்தியா தோற்றதும் இந்திய வீரர் முகமது சிராஜ் உள்ளிட்டோர் மைதானத்திலேயே கண்கலங்கினர். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைவரும் இருண்ட முகத்துடன் வெளியேறினர்.

Did PM Narendra Modi insult Australia captain pat Cummins? What happened in World cup celebration?

கோப்பையுடன் பாட் கம்மின்ஸ்: உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், உலகக் கோப்பையை பெற்றார். இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸ் ஆகியோர் இணைந்து பேட் கம்மின்ஸிடம் வெற்றிக் கோப்பையை வழங்கினர்.

இந்நிலையில் தான், வெற்றிக் கோப்பையை பேட் கம்மின்ஸ் பெற்ற பிறகு, பிரதமர் மோடியை நோக்கி வர, அவர் கம்மின்ஸை கண்டுகொள்ளாமல் அவமதிக்கும் வகையில் விலகிச் செல்வதாகவும், கம்மின்ஸ் சங்கடத்தோடு சிரிப்பதாகவும் குறிப்பிட்டு ஒரு வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி, இவ்வாறு செய்திருக்கக் கூடாது எனப் பலரும் அந்த வீடியோவைப் பகிர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.

Did PM Narendra Modi insult Australia captain pat Cummins? What happened in World cup celebration?

உண்மையில் நடந்தது என்ன?: ஆனால், உண்மையில் நடந்தது இதுதான். ஆஸி அணி கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு கை குலுக்கி, சிரித்த முகத்தோடு சாம்பியன் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. பின்னர், இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிறகு பிரதமர் மோடியும், ஆஸி துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸும் இணைந்து உலக கோப்பையை பேட் கம்மின்ஸிடம் அளித்தனர். அப்போது வானவேடிக்கைகள் முழங்கின.

பின்னர், கோப்பையோடு கம்மின்ஸ் நிற்க, பிரதமர் மோடி, ஆஸி துணை பிரதமரை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினார். அங்கு, ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து பேட் கம்மின்ஸ் உடன் கோப்பையை வாங்கி உற்சாகமாக கொண்டாடினர். வீரர்கள் மேடைக்கு வருவதற்காகவே, அந்தப் பக்கம் பார்த்தபடி இனம்புரியாத ஒரு சிரிப்புடன் எதிர்பார்ப்புடன் நின்று கொண்டிருந்தார் பேட் கம்மின்ஸ்.

சங்கடமாக சிரித்தாரா?: இந்த வீடியோவைத்தான், ஒரு பக்கத்தை மட்டும் கட் செய்து, கம்மின்ஸ், கோப்பையுடன் அருகே வந்தும், பிரதமர் மோடி அங்கிருந்து விலகிச் சென்றது போலவும், அபத்த சூழல் உணர்ந்து கம்மின்ஸ் சங்கடத்தோடு சிரிப்பது போலவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். பரிசளிப்பு நிகழ்வின் முழுமையான காட்சியைப் பார்த்தால் நடந்தது என்ன என்பது விளங்கும்.

மேலும், உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்! இந்த தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டம், இன்றைய மகத்தான வெற்றியில் உச்சக்கட்டத்தை எட்டியது. இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட்டுக்கு பாராட்டுக்கள்" என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+