Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க வாழ்க்கையை பாக்குற விதமே மாறிடும்! நேற்று செஞ்சுரி அடித்த கான்வே கதை தெரியுமா? மிரண்டுடுவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று இங்கிலாந்து அணியை அஹமதாபாத் மைதானத்தில் வீழ்த்தி.. உலகக் கோப்பை தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது நியூசிலாந்து. கடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் பவுண்டரி வித்தியாசத்தில் வீழ்ந்த நியூஸிலாந்து இந்த முறை 40 ஓவருக்கு முன்பே ஆட்டத்தை முடித்து இங்கிலாந்தை பழி தீர்த்து உள்ளது.

நேற்று முதலில் இறங்கிய இங்கிலாந்து 50 ஓவரில் 282/9 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இறங்கிய நியூசிலாந்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 36.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றிக்கு இரண்டு வீரர்கள் காரணம்.. ஒருவர் ரச்சின் ரவீந்திரா இன்னொருவர் தேவன் கான்வே. கான்வே 152, ரச்சின் 123 ரன்கள் அடித்தனர். கடந்த உலகக் கோப்பை போது பெங்களூரில் பாரில் வேலை பார்த்தார்.. இப்போது நியூசிலாந்து ஓப்பனர்.. ராகுல் - சச்சின் பெயரை இணைந்து ரச்சின் பெயர் என்றெல்லாம் பலருக்கும் ரச்சின் வரலாறு பற்றி தெரிந்து இருக்கும்.

Do you know the chilling story of New Zealand World Cup 2023 opener Devon Convoy?

ஆனால் பலருக்கும் கான்வே பற்றி தெரிந்து இருக்காது.. ரச்சின் இந்தியர் என்பதால் அவரை பற்றி படித்தவர்கள் கான்வே பற்றி படித்து இருக்க மாட்டார்கள். நியூசிலாந்து அணி என்பது புத்தர்கள் நிறைந்த இடம். புத்தர்கள் என்றால்.. உலகமே அழிந்தாலும் மைதானத்தில் கோபத்தை காட்டாமல்.. ஜென் நிலையில் இருக்கும் 11 புத்தாக்களின் அணிதான் நியூசிலாந்து.

அப்படி ஒரு அணியில் அந்த புத்தர்களுக்கே டப் கொடுக்கும் விதமாக கொஞ்சமும் எக்பிரஷன் இல்லாமல்.. இது கோபமா.,. சிரிப்பா என்று தெரியாத அளவிற்கு மகேஷ் பாபு பாணியில் ஒருவர் ஆடுகிறார் என்றால் அது கேன் வில்லியம்சன்தான்.. ஆனால் அவருக்கே போட்டியாக வந்து இருப்பவர்தான் இந்த கூலான கான்வே. சிஎஸ்கே அணியில் கடந்த சீசன் ஓப்பனர். சிஎஸ்கே வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர். மெதுவாக தொடங்கி.. ஆங்கர் போட்டு கேம் ஆடி.. அதன்பின் ஆட்டத்தை வேகப்படுத்தும் திறன் கொண்டவர்... அதெல்லாம் சரி இவர் யார்?

யார் இவர்?: இவர் வாழ்க்கையை படித்தால் நாம் வாழ்க்கையை எதிர்கொள்ளும் முறையே மாறிவிடும் என்றெல்லாம் தலைப்பு போட்டு இருக்கிறீர்களே.. யார் பாஸ் இவர் என்று நீங்கள் கேட்கலாம். ஆட்டோக்கார மாணிக்கத்திற்கு பின் ஒரு பாட்ஸா கதை இருப்பது போல.. இவருக்கு பின்பும் ஒரு கதை இருக்கிறது.

பிறப்பால் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கான்வே, 2017 இல் நியூசிலாந்திற்கு மாறுவதற்கு முன்பு 25 வயது வரை ஜோகன்னஸ்பர்க்கில் வசித்து வந்தார். அங்கே தொடர்ந்து பல சீசன்கள் உள்ளூர் லீக் போட்டிகளில் ஆடி வந்தார். ஆனாலும் அவரால் தென்னாப்பிரிக்காவில் வெற்றிபெறவே முடியவில்லை. அணிக்குள் வர அவர் தீவிரமாக முயன்றும் கூட.. தென்னாபிரிக்க ஏ அணிக்கு கூட செல்ல முடியவில்லை. காரணம்.. டொமஸ்டிக் போட்டிகளில் அவர் இறக்கப்பட்ட இடம் அப்படி.

மோசமான சூழ்நிலை: இவருக்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்காமல்.. ஓப்பனரான இவரை மாறி மாறி இறங்க வைத்துள்ளனர். ஒரு போட்டியில் மிடில் ஆர்டர்.. ஒரு போட்டியில் ஒன் டவுன்.. ஒரு போட்டியில் 7-8 இடங்களில் கூட இறக்கி உள்ளனர். இவர் மெதுவாக ஆடி பிறகு வேகம் எடுப்பதை யாரும் அப்போது தென் ஆப்பிரிக்காவில் புரிந்து கொள்ளவில்லை. பல நாட்கள் இதனால் அவர் மனமுடைந்து போய் இருக்கிறார். என்ன செய்வது.. கிரிக்கெட்டை விட்டு விடலாமா என்று கூட நினைத்து இருக்கிறார்.

கிரிக்கெட்டை அவர் விட நினைத்தாலும்.. கிரிக்கெட் அவரை விட மறுத்துள்ளது. தூங்க கூட முடியாமல் பல நாட்கள் அவதிப்பட்டு இருக்கிறார். 2017ல்.. திடீரென ஒருநாள் போதி கீழே அமர்ந்த புத்தருக்கு வந்தது போல.. இவருக்குள்ளும் ஒரு குரல் கேட்டுள்ளது. "வெளியே போ" என்ற குரல் அது. கிரிக்கெட்டை விட்டு அல்ல.. நாட்டை விட்டு. கிரிக்கெட் பேட் கிட்டை கட்டிக்கொண்டு நாட்டை விட்டே கிளம்பினார்.

எல்லோரும் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்க்ஸை தொடங்குவது பள்ளி வயதில். அதில் வென்றால்.. அப்படியே டிவிஷன் தொடங்கி உள்ளூர் போட்டிகளில் ஆடி தேசிய அணிக்கு போகலாம். கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ் எல்லாம் இல்லை. தோற்றால் தோற்றதுதான். ஆனால் தென்னாபிரிக்காவில் கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் இன்னிங்சில் தோற்றவர்.. யாருக்கும் கிடைக்காத இரண்டாவது இன்னிங்க்ஸை நோக்கி சென்றார். 2017ல்.. 26 வயது இருக்கும் போது.. தனது ஆட்டத்தை தொடக்கத்தில் இருந்து தொடங்கினார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: நியூசிலாந்து.. இங்கிலாந்து இரண்டு நாட்டில் எங்கே செல்வது என்று யோசித்தார். இங்கிலாந்தில் அவர் ஏற்கனவே சில உள்ளூர் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அதனால் அங்கே செல்லலாம். ஆனால் அவரின் ஓப்பனர் இடத்திற்கு பெரிய போட்டி இருந்தது. இதனால் நியூசிலாந்து சென்றார். அங்கே சென்றதும் அவருக்கு நேரடியாக வாய்ப்பை யாரும் அள்ளி கொடுக்கவில்லை.

நியூசிலாந்தில் நண்பர்கள் இருந்ததால் அங்கே சென்றார். அதோடு தென்னாப்பிரிக்காவில் கஷ்டப்பட்டு ஆசையாக வாங்கிய கார், வீடு, நிலங்களை எல்லாம் விற்றுவிட்டு அவர் புறப்பட்டார். இங்கே சொத்து இருந்தால் திரும்பி நாட்டிற்கே வரும் எண்ணம் வரும்.. அப்படி எண்ணம் வந்தால் தோல்வியும் கூடவே வரும். நியூசிலாந்தில் தோல்வி அடையும் வாய்ப்பே இருக்க கூடாது. அதனால் தென்னாப்பிரிக்காவில் அனைத்தையும் விற்றுவிட்டே அவர் நியூசிலாந்து வந்தார்.

தோனி ஸ்டைல்: தோனி எப்படி " வாழ்க்கை இப்படியே போயிடுமா சார்" என்று கேட்டாரோ அப்படிதான் இவருக்கும்.. இவரும் கிரிக்கெட்டிற்கு பதிலாக வயிற்று பிழைப்பிற்காக ஆசிரியர் பணியை செய்தார். பள்ளி ஒன்றில் பிடிஆசிரியராக பணியாற்றி அங்கே கிரிக்கெட் சொல்லி கொடுத்தார். 7-8 மணி நேரம் கோச்சிங்.. பின்னர் சிறிய கிளப் கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டம் என்று வாழ்க்கை வாழ்ந்து வந்தார். 3 வருடம் இப்படித்தான் போனது. தனியாக வசித்ததால் தனியாக உணவு சமைப்பது.. பின்னர் வேலை.. பின்னர் கிரிக்கெட் என்று பெரிய அளவில் கஷ்டப்பட்டு உள்ளார்.

Do you know the chilling story of New Zealand World Cup 2023 opener Devon Convoy?

அவர் தனது வாழ்க்கையில் செட்டில் ஆக பல வருடம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து 6 உள்ளூர் தொடர்களில் ஆடினார். அதாவது இங்கே எஸ்எம்ஏடி போல அங்கே நடந்த பல உள்ளூர் போட்டிகளில் இவர்தான் டாப் ரன் ஸ்கோரர். 6 தொடரில் 5ல் இவர் அதிக ரன் எடுத்து தேர்வாளர்கள் கவனத்தை தன் பக்கம் இழுத்தார். இவரின் சமயோஜிதமான் ஆங்கர் ஆட்டத்தை பார்த்து தேர்வாளர்கள் வியந்து போனார்கள்.

அதன்பின் அங்கே குடியிருமை பெற்று ஐசிசி இவரை அனுமதிப்பதற்காக காத்து இருந்தார். கடைசியில் மார்ச் 2020 இல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 28 ஆகஸ்ட் 2020 முதல் நியூசிலாந்திற்காக விளையாடுவதற்கு கான்வே தகுதி பெறுவார் என்பதை உறுதிப்படுத்தியது. இதையடுத்து அதே வருடமே மே 2020 இல், நியூசிலாந்து கிரிக்கெட் அவருக்கு 2020-21 சீசனுக்கு முன்னதாக ஒப்பந்தத்தை அளித்தது.

அதாவது ஐசிசி அனுமதி கொடுக்கும் முன்பே அவருடன் ஒப்பந்தம் செய்து ரெடியாக வைத்து இருந்தது. அதன்பின் அணிக்குள் வந்தவர்.. நியூசிலாந்து அணியிலும் நன்றாக ஆடினார்.. கடந்த 2 சீசனாக சிஎஸ்கே அணிக்கும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினார். அவர் முதலில் நியூசிலாந்து அணிக்குள் வந்த போது அவருக்கு வயது 29. அவர் பல மேடு பள்ளங்களை வாழ்க்கையில் பார்த்து இருக்கிறார். அதிலும் நீண்ட கால போராட்டத்திற்கு பின்பே அவர் வெற்றியை ருசித்தும் உள்ளார். இப்போ சொல்லுங்க.. இவர் வாழ்க்கையை படிச்சா நீங்க வாழ்க்கையை பாக்குற விதமே மாறிடும்தானே?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+