அடேங்கப்பா! விராட் கோஹ்லிக்கு முடி டிரிம் செய்ய இவ்ளோ கட்டணமா? வாயை பிளக்கும் ஃபேன்ஸ்
மும்பை: விராட் கோஹ்லியின் ஹேர்ஸ்டைலுக்கு எவ்வளவு கட்டணம் என்பது குறித்து அவருக்கு சிகை வடிவமைப்பு செய்தவரே கூறியுள்ளார் பாருங்கள்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அது போல் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி ஹேர்ஸ்டைல் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

ஹேர்ஸ்டைல் என்பது முகத்திற்கு லட்சணத்தை கொடுக்கும். அத்துடன் யார் ஹேர்ஸ்டைலை வைத்தே யார் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம். ஹேர்ஸ்டைல் ஆண்களாக இருந்தால் சாதாரணமாக கிராப் வெட்டிக் கொள்வது.
பெண்களாக இருந்தால் வகுடு எடுத்தோ எடுக்காமலோ வாரி கொள்வது. நம் முகத்திற்கு செட்டாக கூடியதை நாமே பார்த்து பார்த்து செய்து கொள்வோம். ஆனால் இதே திருமணம் , சுபவிசேஷங்களுக்கு தனியாக சிகை அலங்காரம் செய்ய ஆட்களை வரவழைப்போம். அவர்களே மேக்கப்பையும் செய்துவிடுவார்கள்.
அது போல் சினிமா, சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் தனித்தனியே ஹேர்ஸ்டைலிஸ்ட்கள் இருப்பர். விஜயகாந்துக்கு ஒரு சில படங்களில் ஹேர்ஸ்டைல் நன்றாக இல்லை என்றும் அதை சரி செய்ய தனது ஹேர்ஸ்டைலிஸ்ட்டை ராதிகா அனுப்பி வைத்தார் என்றும் ஒரு பேட்டிகளில் ராதிகாவே கூறியிருந்தார்.

அந்தளவுக்கு ஹேர்ஸ்டைல் முக்கியமானது. எப்படி சினிமா நடிகர், நடிகைகள் ஹேர்ஸ்டைலிஸ்ட்களை வைத்திருக்கிறார்களோ அது போல் கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கென சிகை அலங்காரம் செய்து கொள்ள தனித்துவமான ஆட்களை நியமித்து வைத்திருக்கிறார்கள்.
விளையாட்டின் போது சிகை அலங்காரம் எல்லாம் களைந்துவிடும் என்றாலும் தோனியும் கோஹ்லியும் தங்கள் சிகை அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்துவார்களாம். தோனி எப்போதும் தனது சிகையை விதவிதமாக மாற்றிக் கொண்டே இருப்பார். அது போல் விராட்டும்தான்.
அந்த வகையில் விராட்டின் ஹேர்ஸ்டைலும் தாடி ஸ்டைலும் தற்போது டிரென்டாகி வருகிறது. அதாவது சிகை அலங்கார நிபுணரான ஆலீம் ஹக்கீம், விராட் கோஹ்லியின் ஹேர்ஸ்டைல் மாற்றுவதற்கு எவ்வளவு செலவு என்பதை தெரிவித்துள்ளார். இவர் பாலிவுட் பிரபலங்களுக்கும் விளையாட்டு பிரபலங்களுக்கும் சிகை அலங்காரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் அவர் விராட்டிடம் கட்டணமாக எவ்வளவு வசூலிக்கிறார் என்பதை அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்போது விராட் கோலிக்கு ஹேர்ஸ்டைலை செய்வதற்கு எவ்வளவு என்பதை வெளிப்படடையாக சொல்லாவிட்டாலும் தோராயமாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சிகை அலங்காரத்திற்காக நான் வாங்கும் கட்டணம் மிகவும் குறைவுதான். நான் எவ்வளவு வசூலிக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். இது ரூ 1 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இதுதான் குறைந்தபட்ச கட்டணமாகும். ஐபிஎஸ் போட்டிகள் நடப்பதால் வித்தியாசமாக சிகை அலங்காரம் செய்ய முடிவு செய்து புதிய முயற்சியை மேற்கொண்டோம். அவரது புருவங்களிலும் ஒரு வித மாற்றத்தை கொண்டு வந்தோம். இவ்வாறு ஹக்கீம் தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லியும் புதிய ஹேர்ஸ்டைலுடன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications