உறுதியானது விவாகரத்து.. மனைவி தனஸ்ரீயை பிரியும் சாஹல்.. மனுஷனாவே மதிக்கல.. பிரிய இப்படி ஒரு காரணமா?
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பரஸ்பர விவாகரத்துப் பெற முடிவு செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இருவரும் Unfollow செய்தபோதே விவாகரத்து குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது முறைப்படி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சாஹல் - தனஸ்ரீ இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. சாஹல் வைத்த இன்ஸ்ட்டா ஸ்டோரி ஒன்றில்.. நான் கடினமாக உழைத்தேன். என் கடின உழைப்பு மூலமே நான் இந்த இடத்திற்கு வந்தேன். நான் அப்பா - அம்மாவிற்கு நல்ல மகனாக இருந்தேன். அப்படியே எப்போதும் இருப்பேன் என்பதாக ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் விவாகரத்தை முன்னிட்டு செய்த போஸ்ட்டாக கருதப்படுகிறது.

இதில் தனஸ்ரீ மீது சில கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. தனஸ்ரீ தனது கணவரை ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. அவரை தூக்கி சுற்றுவது.. நண்பர்கள் முன் அவமதிப்பது போல பேசுவது என்று தனஸ்ரீ மிக மோசமாக நடந்து கொண்டார்.
தனஸ்ரீ சாஹலை பெரிதாக மதிக்கவில்லை. மற்ற கிரிக்கெட் வீரர்கள் போல சாஹல் வசீகரமாக இல்லை என்று தனஸ்ரீ நினைத்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனஸ்ரீ - ஷ்ரேயாஸ் ஐயர் இடையே நட்பு நெருக்கமாக இருப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. இப்படிப்பட்ட நிலையில்தான் வேறு ஒரு இளைஞரை தனஸ்ரீ டேட்டிங் செய்து வருவதாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன. தனஸ்ரீ அவரின் கணவர் சாஹல் உடன் இருந்தது எல்லாம் பணத்திற்காக மட்டுமே என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன.
இணையத்தில் வைக்கப்படும் இந்த புகார்களுக்கு இதுவரை தனஸ்ரீ தரப்பில் இருந்து பதிலோ மறுப்போ அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது முறைப்படி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய விவாகரத்துகள்
சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது நீண்ட கால காதலி, மனைவி சைந்தவியை விவாகரத்து செய்தார். இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் மனஸ்தாபம் காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். அதேபோல் இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி இதேபோல் விவாகரத்து செய்தார். இது போக நடிகை சமந்தா - நாக சைத்தன்யா, நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து விவாகரத்து செய்துள்ளனர்.
இந்த நிலையில்தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர்.
அதிகரிக்கும் விவாகரத்து
இப்படி இந்தியாவில் தற்போது விவாகரத்து வழக்குகள், விவாகரத்து தொடர்பான செய்திகள் கவனம் பெற்று வருகின்றன. அதேபோல் விவாகரத்து ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளும் கவனம் பெற்று வருகின்றன. தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள், பல ஆண்டுகளாக திருமண உறவில் இருந்தவர்கள் கூட விவாகரத்து செய்ய தொடங்கி உள்ளனர். சினிமா திரை உலகை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications