Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தல தோனியின் டயட் சார்ட் பாருங்க! கேப்டன் கூலுக்கு பிடித்த உணவு இதுதானா? ஸ்டன்னான ஃபேன்ஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் தல தோனிக்கு பிடித்தமான உணவு என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இனி இந்த உணவுதான் தல ரசிகர்களின் ஃபேவரைட்டாகவும் இருக்க போகிறது.

கேப்டன் கூல், மாஸ்டர் மைன்ட், தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தோனி. அவரை போல் டீ சர்ட் அணிந்து கொள்வது, ஹேர் ஸ்டைல் செய்து கொள்வது என ரசிகர்கள் அதிரடி காட்டி வருகிறார்கள்.

Do you know what is the favourite diet of MS Dhoni

இந்த நிலையில் அவரின் உணவுப் பழக்க வழக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்தும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தோனிக்கு பால், பால் பொருள்களான சீஸ், பட்டர், நெய், தயிர், பனீர் உள்ளிட்டவை தனக்கு பிடிக்கும் என தோனி ஒரு பேட்டியில் ஏற்கெனவே கூறியிருந்தார். அவருக்கு என்ன பிடிக்கும் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் சமையல் கலைஞர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் கடந்த 4 ஆண்டுகளாக தோனி, தனது உணவு ப பழக்க வழக்கத்தில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். அவர் காலையில் அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, பால், உட்கொள்வாராம். பிறகு காலை டிபனாக 3 இட்லி சாம்பார் சாப்பிடுவார். அது போல் பில்டர் காபி என்றால் தோனிக்கு மிகவும் பிடிக்கும்.

Do you know what is the favourite diet of MS Dhoni

அது போல் அவருக்கு சிக்கன் என்றாலும் பிடிக்கும். மதிய உணவில் பாதி அளவு கிரில் சிக்கன், வேகவைத்த உருளை கிழங்கு, பிரக்கோலி, சிக்கன் டிக்கா, தால் மக்கானி, பட்டர் சிக்கன், நாண், சாலடுகளை சாப்பிடுவாராம். இரவு நேரத்தில் டின்னருக்கு சிக்கன் டிக்காவை ஸ்டஃப் செய்த சான்ட்விச், சாலட், ஆரஞ்ச் ஜூஸ் குடிப்பார்.

இது தவிர தினசரி அவர் உடற்பயிற்சியையும் தவறாமல் செய்கிறார் என செஃப் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டை தவிர தோனி, கால்பந்து, பேட்மிண்டன், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளையும் விளையாட விரும்புவார் என்பது அனைவருக்கும் தெரியும். உடற்பயிற்சியுடன் தியானம் செய்வாராம். இவை எல்லாம் முடித்துக் கொண்டு தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவார்.

தோனியின் உழைப்புதான் அவர் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் குடியிருப்பதற்கு காரணம். மேலும் அவரது எளிமையையும் ரசிகர்கள் விரும்புவார்கள். எத்தனை பெரிய சாதனையை படைத்திருந்தாலும் எந்த பந்தாவும் இல்லாதவர். இவர் யோகி பாபுவை வைத்து சினிமா படத்தையும் எடுத்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+