கிரிக்கெட்டில் எல்பிடபிள்யூ அவுட் (LBW) எவ்வாறு கொடுக்கப்படுகிறது? இந்த 4 ரூல்ஸ்தான் முக்கியம்!
சென்னை: எல்.பி.டபிள்யூ அவுட் எவ்வாறு கொடுக்கப்படுகிறது??? என்பது குறித்து எளிய முறையில் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் பொது மருத்துவராக உள்ள டாக்டர் பரூக் அப்துல்லா மருத்துவம் மட்டுமல்லாமல் கிரிக்கெட், விண்வெளி உள்ளிட்ட துறைகள் குறித்து அவ்வப்போது எழுதி வருவார்.

அந்த வகையில் அவர் எல்பிடபிள்யூ அவுட் எப்படி கொடுக்கப்படுகிறது என்பது குறித்து தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டில் பார்ப்போம். அவர் கூறியிருப்பதாவது : பேட்ஸ்மேன் பேட்டால் அன்றி தனது காலாலோ உடலின் வேறு பகுதிகளாலோ தன்னை நோக்கி வீசப்படும் பந்தை
தடுப்பாரேயானால் பின்வரும் விதிகள் "ஓகே" என்றால் அவர் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனதாக அறிவிக்கப்படும்.
முதலில் வீசப்பட்ட பந்து நோ பாலாக இருக்கக் கூடாது.
இரண்டாவது வீசப்பட்ட பந்து - மூன்று ஸ்டம்புகளின் நேர்க்கோட்டிலோ அல்லது அந்த கோட்டிற்கு "ஆஃப் சைடில்" ( வலக்கை பேட்ஸ்மேன் என்றால் அவரது வலது புறம்/ இடக்கை பேட்ஸ்மேன் என்றால் அவரது இடது புறம்) பந்து "பிட்ச்" ஆகியிருக்க வேண்டும். அந்த கோட்டிற்கு "லெக் சைடு" பந்து குத்தியிருந்தால் அவுட் வழங்கப்பட மாட்டாது. இது பால் பிட்சிங் லெக் சைடு என்று கூறப்பட்டு அவுட் வழங்கப்பட மாட்டாது.
மூன்றாவது பேட்ஸ்மேன் பந்தை தனது கால்களின் பேடிலோ அல்லது உடலின் வேறு பகுதியிலோ முதன் முதலில் சந்திக்கும் இடம் "இம்பாக்ட்" ஆன இடம் என்று அர்த்தம். அந்த இம்பேக்ட் ஆகும் இடம் மூன்று ஸ்டம்புகளின் நேர்க்கோட்டுக்குள் அமைய வேண்டும்
இதை "இம்பாக்ட் ஆன் தி லைன்" என்போம். இதில் இம்பாக்ட் அவுட் சைடு என்றால் அவுட் வழங்கப்பட மாட்டாது.
பேட்ஸ்மேன் ஷாட் ஆட எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால் இந்த இம்பாக்ட் பாய்ண்ட் ஆஃப் சைடு இருந்தாலும் அது விக்கெட் தான். அம்பயர் நாட் அவுட் கொடுத்து டிஆர்எஸ் சென்றால் பந்து பேட்ஸ்மேனின் உடலில் பட்ட இம்பாக்ட் பாய்ண்ட்டுக்கும் ஸ்டம்புகளுக்கும் இடையே 300 சென்டிமீட்டருக்கு மேல் தூரம் இருப்பின் அம்பயரின் தீர்ப்பே இறுதியானது என்று கொள்ளப்படும்.

நான்காவது இம்பாக்ட்டுக்கு பிறகு பந்து நேரே சென்று ஸ்டம்புகளை அல்லது பைல்ஸில் பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு பந்து நேரடியாக சென்று ஸ்டம்புகளை தாக்கும் என்று அம்பயர் முடிவு செய்தால் அவுட் தருவார்.
அவ்வாறு பந்து ஸ்டம்ப்பில் படாது என்றால் அது பால் மிஸ்ஸிங் ஸ்டம்ப்ஸ் என்று அறிவிக்கப்பட்டு அவுட் வழங்கப்படாது.
ஆகவே பந்து பிட்ச் ஆகும் இடம், இம்பாக்ட் ஆகும் இடம்
பந்து பயணம் செய்து ஸ்டம்புகளை தாக்கும்/தாக்காது ஆகியவற்றை வைத்து எல்பிடபிள்யு வழங்கப்படுகிறது. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications