6 போட்டியில் வரிசையாக வென்றாலும்.. இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆபத்து.. உடனே ரோஹித் சுதாரிக்கணும்
சென்னை: 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்றாலும் கூட அணிக்கு முக்கியமான சில ஆபத்துகள் உள்ளன.

கடந்த சில போட்டிகளாக ஆட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.
அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இதன் மூலம் 6 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.
செமி பைனல் ஆபத்து: இதனால் செமி பைனலில் இந்தியாவிடம் இடம் உறுதியாகி உள்ளது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்றாலும் கூட அணிக்கு முக்கியமான சில ஆபத்துகள் உள்ளன.
ஆபத்து 1: இந்திய அணியின் தொடர் வெற்றிகள் முக்கியமான ஆபத்து ஆகும். இதே மனநிலையோடு போனால் திடீர் தோல்விக்கு அது காரணம் ஆகும். ஏனென்றால் இந்திய வீரர்கள் என்று இல்லை தொடர் வெற்றிக்கு யாருக்குமே மிதப்பை கொடுக்கும். அந்த மிதப்பு காரணமாக வீரர்கள் சொதப்ப வாய்ப்பு உள்ளது. இந்த மனநிலையை ரோஹித்தான் மாற்ற வேண்டும். ஒரு தோல்வியாவது இருந்திருந்தால் பயம் வந்திருக்கும். ஆனால் அந்த பயம் இப்போது அணியில் இல்லை.
ஆபத்து 2: இந்திய அணி எப்போதுமே லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடி உள்ளது. ஆனால் செமி, பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோனிக்கு பின்பாக எந்த கேப்டனும் சரியாக ஆடவில்லை. அந்த அழுத்தம் இப்போதும் இந்திய அணிக்கு இருக்கும். அதை சரி செய்ய இந்திய அணி கஷ்டப்பட வேண்டும். இதுவே பெரிய அழுத்தத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்கும்.
ஆபத்து 3: அணியில் மிடில் ஆர்டரில் இன்னுமும் ஒரு இடத்தில் பிரச்சனை உள்ளது. அது ஷ்ரேயாஸ் ஐயர் இடம். அங்கே இஷான் கிஷனை இறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவர் 16 பந்துகள் பிடித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். எதிர்பார்த்தபடியே ஷார்ட் பந்தில் அவர் அவுட் ஆனார். முழுமையாக ஷார்ட்டாக் வராமல் பாதி ஷார்ட் பந்திற்கே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி உள்ளார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை எடுத்த ரன்கள் - 128 ரன்கள் மட்டுமே ஆகும்.,
இன்னிங்ஸ் - 6
சராசரி - 32
ஸ்ட்ரைக் ரேட்- 81.01 என்று மோசமாக ஆடி உள்ளார். அதனால் அவரின் இடம் இன்னும் சிக்கலாக உள்ளது.
ஆபத்து 4: ஓப்பனிங்கில் இன்னும் கில் பார்மிற்கு திரும்பவில்லை. இனி நடக்கும் இக்கட்டான போட்டிகளில் அவர் பார்மிற்கு திரும்பியே ஆக வேண்டும். முக்கியமான நேரத்தில் இது போன்ற வீரர்களின் பார்ம்தான் மிக முக்கியம். இல்லையென்றால் ஓப்பனிங் இறங்க வேறு வீரரை ரோஹித் பிடிக்க வேண்டும்.
ஆபத்து 5: இலங்கைக்கு எதிராக நாளை மறுநாள் இந்தியா ஆட உள்ள உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா கசப்பான 2 முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹர்டிக் பாண்டியா காயம் அடைந்தார். அவர் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பி உள்ளார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் ஆடும் வாய்ப்புகள் உள்ளனர். அவர் காயம் காரணமாக அணியில் ஷரத்துல் தாக்கூர் நீக்கப்பட்டார். கூடுதல் பேட்ஸ்மேன் வர வேண்டும் என்று சூர்யா குமார் யாதவ் உள்ளே கொண்டு வரப்பட்டார். அதேபோல் ஷமி அணிக்குள் எடுத்து வரப்பட்டார். இந்த நிலையில்தான் ஹர்திக் உள்ளே வருவதால் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. இவர் மீண்டு வருவதால் அணியில் என்ன மாற்றம் வரும். ஷமி நீக்கப்படுவாரா அல்லது சிராஜ் நீக்கப்படுவாரா அல்லது சூர்யா குமார் நீக்கப்படுவாரா என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications