உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. ஐபோனை விற்று ரூ.56,000க்கு டிக்கெட்! போலி என அறிந்த ரசிகர் பேரதிர்ச்சி
டெல்லி: ஐபோனை விற்று 56 ஆயிரம் ரூபாய் கொடுத்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் டிக்கெட்டை போன்றே போலியான டிக்கெட்டை விற்று ரசிகர் ஒருவர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்பொட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை முழுக்க அகமதாபாத் நோக்கி உள்ளது. இறுதிப்போட்டியை எப்படியாவது நேரில் பார்க்க முடியாதா என்ற ஏக்கத்தில் அகமாதாபாத் நகருக்கு சென்று கள்ள சந்தையில் பல லட்சங்கள், பல ஆயிரங்களை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள் ரசிகர்கள். ஆன்லைனில் டிக்கெட் விற்பனை என்று அறிவிக்கப்பட்டாலும் அவை சில நொடிகளில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியை பார்த்தே தீர வேண்டும் என முடிவெடுத்த ரசிகர் ஒருவர் இணையத்தில் டிக்கெட் கிடைக்குமா என்று தேடி உள்ளார். அப்போது எக்ஸ் தளத்தில் ரியா என்று கூறிக்கொண்டு ஒரு பெண் அறிமுகமானார். அவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பதாக கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் அந்த பெண்ணிடம் டிக்கெட் தொடர்பாக உரையாடியுள்ளார்.
அதில் ஒரு டிக்கெட் ரூ.56 ஆயிரம் என்று அந்த பெண் கூற இது அதிக கட்டணமாக உள்ளது என்றும், குறைக்க வேண்டும் எனவும் கேட்க, ஏற்கனவே டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதாகவும், விலையை குறைக்க முடியாது எனவும் கூறி இருக்கிறார். உடனே இவர் 5 நிமிடங்கள் கொடுங்கள் நான் பேசுகிறேன் என்று கூறிவிட்டு, பின்னர் பாதி தொகையை தருகிறேன். நீங்கள் டிக்கெட் அனுப்பிய பிறகு மீதியை பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.
உடனே அந்த பெண், என்னை மோசடிக்காரி போன்று நீங்கள் நடத்த வேண்டாம். நான் வேறொருவரிடம் விற்றுக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். உடனே இவர், நான் போன் பே மூலம் பணம் அனுப்புகிறேன் என்று கூறி, பணம் செலுத்திய ஸ்க்ரீன் ஷாட்டையும் அனுப்பி உள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டேன். டிக்கெட்டை மெயில் செய்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் அந்த டிக்கெட் போலியானது என்பது தெரிந்து ஐபோன் விற்று டிக்கெட் வாங்கிய கிரிக்கெட் ரசிகர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
இதுபோன்ற டிக்கெட்டுகள் இணையத்தில் அதிகளவில் உலா வருவதாகவும், இது போலியான டிக்கெட் என்றும் தன்னுடைய நண்பர் தெரிவித்ததாகவ்யும் அவர் வேதனை தெரிவித்து இருக்கிறார். தன்னை ஏமாற்றிய பெண்ணின் அந்த எக்ஸ் கணக்கு நீக்கப்பட்டுவிட்டதாகவும், தன்னை அந்த பெண் பிளாக் செய்துவிட்டதால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறி இருக்கிறார். இது தொடர்பாக போலீசில் புகாரளிக்க உள்ளதாகவும், யாரும் தன்னை போல் ஏமாந்துவிட வேண்டாம் எனவும் அவர் எச்சரித்து உள்ளார்.
அந்த வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும், போலி டிக்கெட்டுகளின் படங்களையும் பிரபல இணைய பாதுகாப்பு நிபுணரும், மோசடி ஆய்வாளாரும், எழுத்தாளருமான ஹரிஹரசுதன் தங்கவேலு பேஸ்புக்கில் பகிர்ந்து, “ஐபோனை விற்று 56000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி ஏமாந்தவர் - உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் தருகிறோம் என லட்சக்கணக்கில் மோசடி நிகழ்ந்து வருகிறது. கவனம் நண்பர்களே ! மோசடிகளில் சிக்கி பணம் இழக்காதீர்.” என்று குறிப்பிட்டு எச்சரித்து இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications