பிட்னஸ் ஜோடி.. 3வது காதலியுடன் ஜிம்மில் பயிற்சி செய்யும் மும்பை கேப்டன்.. ஹர்திக் போட்ட பிக்ஸ்!
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது 3வது காதலியான மஹிகா சர்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆசியக் கோப்பைத் தொடரின் போது காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா ஓய்வில் இருந்த நிலையில், புதிய காதலிடன் விடுமுறையை கொண்டாடி வருவது ரசிகர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வரும் ஹர்திக் பாண்டியா, ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்பாக காயம் அடைந்தார். இதன்பின் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார்.

இதனிடையே தனது மகன் மற்றும் புதிய காதலியுடன் ஹர்திக் பாண்டியா நேரம் செலவிட்டு வந்தார். மும்பை அணிக்காக ஆடிய போது மாடல் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்கை திருமணம் செய்த ஹர்திக் பாண்டியா, 3 ஆண்டுகள் வரை அவருடன் வாழ்ந்து வந்தார். இதையடுத்து 2024 ஜனவரி மாதத்திற்கு பின் ஹர்திக் பாண்டியா பிரிட்டிஷ் மாடல் நடிகையான ஜாஸ்மின் வாலியாவுடன் வாழத் தொடங்கினார்.
நடாஷாவை விவாகரத்து செய்வதற்கு முன்பாகவே ஹர்திக் அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இதனை ஜாஸ்மின் வாலியாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் உறுதி செய்தன. கடந்த ஓராண்டாக ஜாஸ்வின் வாலியாவுடன் இருந்த ஹர்திக் பாண்டியா, அவரை பாலிவுட்டில் அறிமுகம் செய்ய முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
தற்போது ஹர்திக் பாண்டியா 3வது முறையாக காதலில் விழுந்துள்ளார். பிரபல மாடல் நடிகையான மஹிகா சர்மாவுடன் ஊர் சுற்றி வந்த ஹர்திக் பாண்டியா, அவரின் பிறந்தநாளன்று புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதி செய்தார். இதன்பின் ஹர்திக் பாண்டியா - மஹிகா சர்மா ஜோடி பிரபலமாகியது. எங்கு சென்றாலும் ஹர்திக் பாண்டியா - மஹிகா இருவரும் ஒன்றாக பயணித்து வந்தனர்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஹிகா சர்மாவுடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. விடுமுறை நாட்களை தனது மகன் மற்றும் புதிய காதலியுடன் ஹர்திக் பாண்டியா செலவிட்டு வருவது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications