ஹர்திக் பாண்டியாவை தவிர்க்கும் அம்பானி.. பெயரை கூட பதிவிடாத மும்பை அணி.. என்ன நடக்கிறது?
மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக பும்ரா களமிறக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக மும்பை அணியுடன் ஹர்திக் பாண்டியா பயணிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனால் மும்பை அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி மற்றும் பயிற்சியாளர் ஜெயவர்தனே ஆகியோர் ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை குவித்துள்ளது. 140 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த போதும், ஓமர்சாயின் அதிரடி ஆட்டம் காரணமாக 200 ரன்களை எட்டியது.

மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சஹரும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக பும்ரா களமிறங்கினர். 19 வயதிலேயே மும்பை அணிக்காக விளையாடி இருந்தாலும், மும்பை அணியின் கேப்டனாக களமிறங்குவது இதுவே முதல்முறை. இதனால் பும்ராவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஆனால் மும்பை அணியுடன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருமே பயணிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு சில நாட்களுக்கு முன் தான் பெண் குழந்தை பிறந்தது. அவரும் பெரிய ஃபார்மில் இல்லை. மும்பை அணியும் பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றப்பட்டதால், அவருக்கு பிரஷர் கொடுக்கவில்லை.
ஹர்திக் பாண்டியா விவகாரம் தான் மும்பை ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. ஏனென்றால் முதுகு தசைப்பிடிப்பு காரணமாக ஹர்திக் பாண்டியா ஓய்வில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஹர்திக் பாண்டியா பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அந்த புகைப்படங்கள் கூட மும்பை அணியின் சோசியல் மீடியாவில் வெளியிடப்படவில்லை.
இந்தப் போட்டியிலும், இதற்கு முந்தைய போட்டியிலும் கூட ஹர்திக் பாண்டியா குறித்து மும்பை அணியின் சோசியல் மீடியா பக்கத்தில் எந்தவொரு பதிவும் வெளியிடப்படவில்லை. இதன் மூலமாக மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி மற்றும் பயிற்சியாளர் ஜெயவர்தனே ஆகிய இருவரும் ஹர்திக் பாண்டியாவை புறக்கணிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் போதே ஆகாஷ் அம்பானி பாதியுடன் எழுந்து சென்றார். 3 சீசன்களாக ஹர்திக் பாண்டியாவுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதால், அவர் மீதான நம்பிக்கையை அந்த அணியின் உரிமையாளர்கள் இழந்துவிட்டார்கள் என்றும் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications