Ind vs Pak மேட்சில் ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த ஆரஞ்ச் கலர் வாட்ச்! அடேங்கப்பா விலை ரூ.7 கோடியாம்!
அபுதாபி: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ஆட்டத்தின்போது, ஹர்திக் பாண்டியா கட்டியிருந்த ஆரஞ்ச் நிற வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பாண்டியா அணிந்திருந்த அந்த ஸ்பெஷல் லிமிட்டட் எடிஷன் வாட்ச் விலை ரூ.7 கோடியாம்.
இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகம் கொடுத்திருந்தாலும், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த வாட்ச் மைதானத்திற்கு வெளியே பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது.

துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் அடித்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் முதல் அணியாக அரையிறுதி சுற்றிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி சதம் அடித்தார் விராட் கோலி. சதம் அடிப்பாரா, அதற்கான வாய்ப்பு இருக்குமா என்ற நிலையில் கடைசியில் பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை கடந்ததுடன், 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் கோலி. சர்வதேச அரங்கில் 51-வது ஒருநாள் சதத்தையும் நிறைவு செய்துள்ளார் விராட் கோலி.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 8 ஓவர்கள் பந்து வீசிய ஹர்திக் பாண்டியா வெறும் 31 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முக்கியமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விக்கெட்டை காலி செய்தார் ஹர்திக் பாண்டியா.
பாபர் அசாம் விக்கெட் எடுத்துவிட்டு அவருக்கு டாட்டா காட்டினார் ஹர்திக் பாண்டியா. அப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது பாபருக்கு பாண்ட்யாவின் உற்சாகமான வாழ்த்து மட்டுமல்ல, அவரது அதி ஆடம்பரமான ரிச்சர்ட் மில்லே RM 27-02 வாட்ச்சும் தான். இதன் மதிப்பு $800,000 அமெரிக்க டாலர். அதாவது ரூ.6.93 கோடி என ஆன்லைன் லக்ஸரி வாட்ச் விற்பனையாளரான ஜெம் நேஷன் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் விக்கெட்டை பிறகு, பாண்ட்யாவின் வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஹர்திக் பாண்டியா கட்டிக் கொண்டிருந்த வாட்ச் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. திருவிழாவில் விற்கப்படும் வாட்ச் போன்ற கலரில் இருந்தாலும் அதன் விலையை கேட்டதும் ரசிகர்கள் மிரண்டு போயினர்.
பாண்டியா தனது கையில் கட்டியிருந்த ரிச்சர்ட் மில்லே RM 27-02 CA FQ. இதன் டூர்பில்லன் ரஃபேல் நடால் ஸ்கெலிட்டன் டயல் அனைவரையும் ஈர்த்தது. இந்த வாட்ச் இதுவரை 50 வாட்ச்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட ஒரு லிமிடேட் எடிஷன் வாட்ச். இந்த வாட்சின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடி ஆகும். இந்த வாட்ச் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடாலுக்காக தயாரிக்கப்பட்டது.
ஹர்திக் பாண்டியா நீண்ட காலமாக தனது ஆடம்பரமான உயர் ரக கடிகார சேகரிப்புக்கு பெயர் போனவர். அவரது சேகரிப்பில் வாட்ச் உலகில் உயர் ரக வாட்ச் சேகரிப்பாளர்கள் வியந்து ரசிக்கும் பல கடிகாரங்கள் உள்ளனவாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications