16 ரன்களில் சதத்தை தவறவிட்ட கம்பீரின் செல்லப்பிள்ளை.. 10 ஓவர்களில் 84 ரன்கள் கொடுத்த ஹர்சித் ராணா!
இந்தூர்: இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு 338 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி பவுலர்கள் 99 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். அதிலும் ஹர்சித் ராணா 10 ஓவர்களை வீசி 84 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மிட்சல் - பிலிப்ஸ் கூட்டணி இணைந்து 200 ரன்களுக்கும் மேலாக பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய மிட்சல் 131 பந்துகளில் 3 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 137 ரன்களையும், பிலிப்ஸ் 88 பந்துகளில் 3 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 106 ரன்களையும் விளாசி தள்ளியுள்ளனர். 36 ஓவர்கள் வரை இந்திய அணியின் கைகளே ஆட்டத்தில் ஓங்கி இருந்தது.
ஆனால் டேரல் மிட்சல் சதம் விளாசிய பின், ஆட்டம் மொத்தமாக நியூசிலாந்து பக்கம் சென்றது. குறிப்பாக ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா இருவரையும் எளிதாக கணித்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்தனர். ஏற்கனவே மிட்சல் களத்தில் இருந்ததால், ஸ்பின்னர்களை தாமதமாகவே கேப்டன் சுப்மன் கில் அட்டாக்கில் கொண்டு வந்தார்.
ஆனாலும் அவர்களால் ரன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இரு ஸ்பின்னர்களுக்கும் 6 ஓவர்களோடு நிறுத்திய சுப்மன் கில், நிதிஷ் குமார் ரெட்டியை 8 ஓவர்கள் வீச வைத்தார். ஆனால் புதிய பந்தில் கட்டுக்கோப்பாக பவுலிங் செய்த ஹர்சித் ராணா, பந்து கொஞ்சம் பழையதாக மாறிய பின், ரன்களை வாரி வழங்கினார்.
10 ஓவர்கள் வீசிய ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டு 84 ரன்களை விட்டுக் கொடித்துள்ளார். மறுபக்கம் முகமது சிராஜ் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 43 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். ஹர்சித் ராணா சுமார் ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணியில் தொடர்ந்து விளையாடிய போதும், இன்னும் எப்படி கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்வது என்பதே தெரியாமல் இருப்பது விமர்சனத்தை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications