Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தம் 3 காரணங்கள்.. சொல்லியடித்த ஆஸ்திரேலியா.. உலக கோப்பையில் இந்தியா தோல்விக்கு காரணமே இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா- ஆஸ்திரேலியா மோதிய நிலையில், இதில் இந்தியாவின் பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலியா முடக்கியதே அவர்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதை அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே அகமதாபாத்தில் நேற்றைய தினம் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

How Australia Managed To Dominate In-Form Indian Batters in cricket world cup finals

அடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலியா அட்டகாசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 43 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்களை இழந்து 241 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 6ஆவது முறையாக ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது.

உலகக் கோப்பை: இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் பேட்டிங் மிகவும் வலிமையான ஒன்றாக இருந்தது. ரோஹித் ஷர்மா ஆரம்பத்தில் அதிரடியாக விளாசி வேற லெவல் தொடக்கத்தைக் கொடுக்க, விராட் கோலி தனது டிரேட் மார்க் ஆட்டத்தின் மூலம் போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார். இதுவே இந்தியாவின் பேட்டிங் பார்முலாவாக இருந்தது. இந்தியாவின் அனைத்து பேட்ஸ்மேன்களும் இந்தத் தொடர் முழுக்க வேற லெவல் ஃபார்மில் இருந்தனர்.

டாப் ஆர்டரில் இந்திய வீரர்களின் இந்த கலக்கலான ஆட்டம் காரணமாகவே ஜடேஜா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட பின் வரிசை வீரர்களுக்கு பெரியளவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நிலைமை மொத்தமாக மாறியது. இந்திய பேஸ்ட்மேன்கள் அகமதாபாத் மைதானத்தில் ரன் அடிக்கவே திணறினார்கள். 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. இந்த உலகக் கோப்பையில் இந்தியா ஆல் அவுட் ஆவது இதுவே முதல்முறையாகும்.

காரணம் 1: ஃபார்மில் இருந்த இந்திய பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலியா முடக்கியது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம். இதில் ஆஸ்திரேலியாவின் ஃபீல்டிங்கை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். நேற்றைய போட்டியில் ஃபீல்டிங் மூலமே கணிசமான ரன்களை ஆஸ்திரேலியா தடுத்தனர். குறிப்பாக ரோஹித் அவுட் ஆக்கிய டிராவிஸ் ஹெட் அந்த அற்புதமான ரன்னிங் கேட்ச் தான் ஆட்டத்தின் முதல் திருப்புமுனையாக இருந்தது. மேலும், பல பவுன்டரிகளை ஆஸ். வீரர்கள் தங்கள் ஃபீல்டிங் மூலம் தடுத்ததும் இந்திய பேட்ஸ்மேன்களின் ரிதமை பாதித்தது.

கோலி பேட்டிங் செய்த போது உள்ளே நுழைந்த அந்த நபர் யார்! எதுக்கு அப்படி செய்தார் தெரியுமா! பரபர வீடியோ

இது சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு முதல் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியாகும். இதனால் அவர்கள் சற்று பதட்டமாக இருந்தனர். கில் ஆடிய விதமே அவர் பதற்றமாக இருந்ததைக் காட்டியது. ஷ்ரேயாஸ் ஐயர் இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை ஆடிய போதிலும், இறுதிப் போட்டியில் சொதப்பினார். அவர் மூன்று பந்துகள் மட்டுமே ஆடினார். ஷ்ரேயாஸ் அவுட் ஆனதும் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

காரணம் 2:
81க்கு 3 என்று இந்தியா இக்கட்டான சூழலில் இருந்த போது, கோலி மற்றும் ராகுல் தான் இந்திய அணியைக் காப்பாற்றியது. இதுபோல ஒரு பிட்சில் அவர்கள் இரண்டு பேரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் இரண்டு பேரும் தங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பவுன்டரியை தவிர்த்துவிட்டு, அவர்கள் ஒன்று இரண்டு என எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதுவும் இந்தியாவின் ரன் ரேட்டை வெகுவாக குறைத்தது.

காரணம் 3: இத்துடன் பின் வரிசையில் இறங்கிய ஜடேஜா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பெரிதாக ஆடவில்லை. இவை எல்லாம் சேர்த்துத்தான் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டிப் போட்டது. இதுபோன்ற ஒரு பிட்ச்சில் ரன் அடிப்பது கடினம்தான் என்ற போதிலும் வலிமையான இந்தியாவிடம் இருந்து இப்படியொரு பேட்டிங்கை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் பீல்டிங், நடு ஓவர்களில் பவுன்டரிகள் இல்லாமல் போனது, பின்வரிசை வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆடாமல் போனது ஆகியவை தான் இந்திய பேட்டிங்கை ஸ்கெட்ச் போட்டு ஆஸ்திரேலியா தூக்க காரணமாக இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+