கோலி பேட்டிங் செய்த போது உள்ளே நுழைந்த அந்த நபர் யார்! எதுக்கு அப்படி செய்தார் தெரியுமா! பரபர வீடியோ
டெல்லி: இந்தியா ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது திடீரென ஒரு இளைஞர் மைதானத்திற்குள் நுழைந்து கோலி அருகே சென்ற நிலையில், அவர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றனர். 2011க்கு பிறகு இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பமாக இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ரோஹித், கில் நன்றாகவே ஆடி வந்தனர். குறிப்பாக ரோஹித் வழக்கம் போல அடி வெளுத்து வாங்கினார்.
உள்ளே நுழைந்த இளைஞர்: அப்போது கோலி ஆடிக் கொண்டிருந்த போது, திடீரென பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் அணிந்த நபர் மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்திற்குள் நுழைந்த அந்த இளைஞர் நேரடியாக விராட் கோலியிடம் சென்றார். பின்னர், அவரை பிடித்த காவலர்கள் மைதானத்தில் இருந்து அவரை அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், சிறிது நேரம் கழித்து போட்டி வழக்கம் போலத் தொடங்கியது.
இதற்கிடையே விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த அந்த நபர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில்தான் அவர் தனது பெயர், எந்த நாட்டை சேர்ந்தவன் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
யார் அவர்: 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவான டி-ஷர்ட் அணிந்து அந்த நபர் மைதானத்திற்குள் நுழைந்திருந்தார். இதற்கிடையே அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த இறுதிப் போட்டியில் கோலியை பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்த நபர் ஓடிச் சென்று கோலியைக் கட்டியணைத்தார். அதற்குள் அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்.
இதற்கிடையே அந்த நபர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அந்த நபர் தனது பெயர் ஜான் என்றும் விராட் கோலியைச் சந்திக்கவே களத்தில் இறங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் ஏன் அணிந்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, தான் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.
என்ன காரணம்: அந்த வீடியோவில் அந்த நபர், "எனது பெயர் ஜான். நான் நான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவன். எனக்கு விராட் கோலியை ரொம்ப பிடிக்கும். அவரை பார்க்கவே நான் மைதானத்திற்குள் நுழைந்தேன்" என்றார். பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அந்த நபர், "பாலஸ்தீனத்தில் இப்போது போர் தொடர்ந்து நடந்து வருகிறது. நான் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறேன். இதன் காரணமாகவே பாலஸ்தீன ஆதரவு டீ சர்ட் அணிந்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications